
ஆம் ஆத்மி எம்.எல்.ஏ., மெஹ்ராஜ் மாலிக்கிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீசாருக்கு, உயர் நீதிமன்றம் தடை விதித்த நிலையில், பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் காவலில் வைத்திருப்பது நியாய மற்றது. மெஹ்ராஜ் மீதான நடவடிக்கையை துணைநிலை கவர்னர் திரும்ப பெறுவதுடன், அவரை விடுவிக்க வேண்டும்.
ஒமர் அப்துல்லா ஜம்மு - காஷ்மீர் முதல்வர், தேசிய மாநாட்டு கட்சி
அரசியல் கட்சி அல்ல
!
உ.பி.,யில் கொலை, மிரட்டல், நில மோசடி உள்ளிட்டவற்றில் ஆளும் பா.ஜ., அரசு ஈடுபட்டு வருகிறது. இதற்கான பண பட்டுவாடாக்கள், முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லம் மற்றும் அலுவலகத்திலேயே அரங்கேறுகிறது. பா.ஜ., அரசியல் கட்சி அல்ல; அது ரவுடி கும்பல் போல் இயங்குகிறது.
அகிலேஷ் யாதவ் தலைவர், சமாஜ்வாதி
மத நல விரும்பிகள்!
வக்ப் சட்டத்திருத்தங்கள் பற்றி பார்லி.,யில் விவாதித்து சட்டமாக இயற்றப்பட்டது. இது, நிர்வாக ரீதியில் மேற்கொண்ட சீர்த்திருத்தமே தவிர, மத ரீதியானது அல்ல. அரசியலமைப்பு சீர்த்திருத்தங்களின் மீது வகுப்புவாத தாக்குதல்களில் ஈடுபடுவோர் நாட்டின் நலம் விரும்பிகள் அல்ல; மதத்தின் நல விரும்பிகள்.
முக்தார் அப்பாஸ் நக்வி முன்னாள் மத்திய அமைச்சர், பா.ஜ.,

