sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

 மெட்ரோ ரயில் பாதை நீட்டிப்பு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

/

 மெட்ரோ ரயில் பாதை நீட்டிப்பு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

 மெட்ரோ ரயில் பாதை நீட்டிப்பு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

 மெட்ரோ ரயில் பாதை நீட்டிப்பு மத்திய அமைச்சரவை ஒப்புதல்


ADDED : பிப் 15, 2026 12:24 AM

Google News

ADDED : பிப் 15, 2026 12:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: டில்லி அருகே, நொய்டா 142வது செக்டார் முதல் பொட்டானிக்கல் கார்டன் வரை எட்டு நிலையங்கள் கொண்ட 11.56 கி.மீ., துாரத்துக்கு மெட்ரோ ரயில் வழித்தடத்தை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதுகுறித்து, மத்திய அரசு நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று முன் தினம் நடந்தது. டில்லி அருகே, நொய்டா 142வது செக்டார் முதல் பொட்டானிக்கல் கார்டன் வரை, 11.56 கி.மீ., துாரத்துக்கு மெட்ரோ ரயில் வழித்தடத்தை நீட்டிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த வழித்தடத்தில் உயர்நிலையில் எட்டு ரயில் நிலையங்கள் அமைக்கின்றன. இந்த வழித்தடம் செயல்பாட்டுக்கு வந்த பின், நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டா ஆகிய நகரங்களில் 61.62 கி.மீ., தூரத்துக்கு மெட்ரோ ரயில் வசதி கிடைக்கும்.

மேலும், நொய்டாவின் பல பகுதிகளில் இருந்து சொந்த வாகனத்தில் செல்வோர், பொது போக்குவரத்து மாறும் நிலையும் உருவாகும்.

பொட்டானிக்கல் கார்டனில் டில்லி மெட்ரோ ரயிலின் புளூ லைன் மற் றும் மெஜந்தா லைன் வழித்தடங்களுக்கு மாற முடியும். நொய்டாவின் முக்கிய மண்டலங்கள், வணிக வளாகங்கள் மற் றும் கல்வி நிறுவனங்களை இந்த மெட்ரோ ரயில் வழித் தடம் இணைக்கிறது.

பொட்டானிக்கல் கார்டன் மற்றும் 93வது செக்டார் பூங்கா உள்ளிட்ட முக்கிய சுற்றுலா தலங்களையும் இந்த வழித்தடம் இணைக்கிறது.

இந்த நீட்டிப்பால் வேலைவாய்ப்பு, வர்த்தகம், கல்வி, பொதுப் போக்குவரத்து பயன்பாடு மற்றும் பொருளாதாரத்திலும் முன்னேற்றம் ஏற்படும். நொய்டா மற்றும் டில்லியில் போக்குவரத்து நெரிசல் குறையும். சுற்றுச்சூழல் மேம்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us