தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ குண்டு வெடிப்பு தரவுகளுக்கான புதிய தளம்: மத்திய அமைச்சர் அமித் ஷா துவக்கினார்

 குண்டு வெடிப்பு தரவுகளுக்கான புதிய தளம்: மத்திய அமைச்சர் அமித் ஷா துவக்கினார்

 குண்டு வெடிப்பு தரவுகளுக்கான புதிய தளம்: மத்திய அமைச்சர் அமித் ஷா துவக்கினார்


ADDED : ஜன 11, 2026 12:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 11, 2026 12:18 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குருகிராம்: நாடு முழுதும் நடக்கும் குண்டுவெடிப்பு சம்பவங்களின் விபரங்கள், தொழில்நுட்ப அம்சங்கள், முறைகள் ஆகியவற்றை சேகரித்து ஆய்வு செய்து, பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் உள்ளிட்டோருக்கு தகவல்களை பகிரும் வகையிலான என்.ஐ.டி.எம்.எஸ்., என்ற தளத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று முன்தினம் துவக் கி வைத்தார்.

ஐ.இ.டி., எனப்படும் மேம்படுத்தப்பட்ட சக்திவாய்ந்த வெடிகுண்டு, உள்நாட்டு பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டில் நடந்த இந்த வகை குண்டு வெடிப்புகளால் ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்கள், பாதுகாப்பு படையினர் கொல்லப் பட்டுள்ளனர்.

என்.எஸ்.ஜி., எனப்படும் தேசிய பாதுகாப்பு படை, நாட்டில் நடக்கும் இது போன்ற அனைத்து வகையான குண்டுவெடிப்பு சம்பவங்களையும் ஆய்வு செய்கிறது. இதற்காக கடந்த 2000ல் தேசிய வெடிகுண்டு தரவு மையம் உருவாக்கப்பட்டது.

தற்போது இதன் ஒரு பகுதியாக ஐ.இ.டி., குண்டு வெடிப்பு சம்பவங்களை மட்டும் ஆய்வு செய்வதற்காக என்.ஐ.டி.எம்.எஸ்., எனப்படும் தேசிய ஐ.இ.டி., வெடிகுண்டுகளுக்கான தரவு மேலாண்மை அமைப்பு என்ற ஒன்றை என்.எஸ்.ஜி., உருவாக்கிஉள்ளது.

குஜராத்தின் காந்தி நகரில் உள்ள ராஷ்ட்ரீய ரக்ஷா பல்கலை, ஐ.ஐ.டி., டில்லி, தேசிய புலனாய்வு அமைப்பு மற்றும் இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையம் ஆகிய நிறுவனங்கள் இந்த தரவு தள உருவாக்கத்தில் என்.எஸ்.ஜி.,க்கு உதவி உள்ளன.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வீடியோ கான்பிரன்ஸ் முறையில் இந்த தரவு மேலாண்மை மையத்தை நேற்று முன்தினம் துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், 'தேசிய ஐ.இ.டி., தரவு மேலாண்மை அமைப்பு பயங்கரவாத சம்பவங்களுக்கு எதிரான கேடயமாகவும், தேசிய சொத்தாகவும் செயல்படும்.

'இது குண்டுவெடிப்புகள் குறித்த விரிவான தரவுகளை போலீஸ், மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு மற்றும் என்.ஐ.ஏ., உள்ளிட்ட மத்திய அமைப்புகளுக்கு பகிரும்' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us