மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு பீஹார் தேர்தல் பொறுப்பு: பாஜ அறிவிப்பு
மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு பீஹார் தேர்தல் பொறுப்பு: பாஜ அறிவிப்பு
ADDED : செப் 25, 2025 03:03 PM

புதுடில்லி: பீஹாரில் நடக்கவுள்ள சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானை நியமித்து பாஜ தலைமை உத்தரவிட்டுள்ளது.
பீஹாரில் இந்த ஆண்டின் இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது. ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) அரசாங்கத்தை ஜனதா தளம் (ஐக்கிய) கட்சியைச் சேர்ந்த முதல்வர் நிதிஷ் குமார் தலைமையேற்று நடத்தி வருகிறார்.
ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) மற்றும் காங்கிரஸ் அடங்கிய மகாகத்பந்தன் (மகா கூட்டணி) எதிர்க்கட்சியாக உள்ளது. என்டிஏ மற்றும் எதிர்க்கட்சிக் கூட்டணி ஆகிய இரண்டிலுமே சீட்-பகிர்வு குறித்த விவாதங்கள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் பாஜ தலைமை சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் பொறுப்பாளர்கள் குறித்து அறிவித்துள்ளது.
அதன்படி,வரவிருக்கும் பீஹார் சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் நியமிக்கப்பட்டுள்ளார். குஜராத் பாஜ தலைவர் சி.ஆர்.பாட்டீல், உத்தர பிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா ஆகியோரும் இணை பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மூத்த பாஜ தலைவரும் மத்திய அமைச்சருமான பிரதான், கடந்த காலத்தில் பீஹார் தேர்தல்கள் உட்பட பல தேர்தல்களில் கட்சிக்கு தேர்தல் நிர்வாகியாக இருந்துள்ளார் என்பது
குறிப்பிடத்தக்கது.