இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்தார் நிதி அமைச்சர் நிர்மலா
இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்தார் நிதி அமைச்சர் நிர்மலா
UPDATED : பிப் 01, 2024 01:09 PM
ADDED : பிப் 01, 2024 11:13 AM

புதுடில்லி: தேர்தல் நெருங்குவதால் பல்வேறு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள 2024 க்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பார்லி.,யில் தாக்கல் செய்தார். முன்னதாக அவர் ஜனாதிபதி மாளிகைகக்கு சென்று ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து பேசினார். அவருக்கு இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தார் ஜனாதிபதி.
பட்ஜெட் தாக்கல் செய்த போது முன்னுரையில் நிதி அமைச்சர் நிர்மலா பேசியதாவது: 10 ஆண்டுகளில் இந்தியா பொருளாதார முன்னேற்றம் கண்டு வருகிறது. பிரதமர் மோடியின் தலைமையிலான அரசு நாடு பெரும் வளர்ச்சியை பெற்றுள்ளது.காகிதம் இல்லாத பட்ஜெட்
* பார்லி.,யில் இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட், நிர்மலா சீதாராமனுக்கு 6வது பட்ஜெட்டாகும்.
* மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு இது தொடர்ச்சியான 11வது பட்ஜெட்.
* நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் நான்காவது முறையாக காகிதம் இல்லாத பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
சிவப்பு நிற வெல்வெட்