கும்பமேளாவில் குடும்பத்துடன் புனித நீராடிய மத்திய அமைச்சர்
கும்பமேளாவில் குடும்பத்துடன் புனித நீராடிய மத்திய அமைச்சர்
ADDED : பிப் 19, 2025 07:39 AM

மத்திய உணவு துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, குடும்பத்தினர், கும்பமேளாவில் புனித நீராடினர்.
உத்தர பிரதேச மாநிலம்,பிரயாக்ராஜில் கும்பமேளா வெகுவிமரிசையாக நடக்கிறது. நாடு முழுதும் இருந்து கோடிக்கணக்கான பக்தர்கள் கங்கையில் புனித நீராடி வருகின்றனர்.
இந்நிலையில் கர்நாடகாவின் தார்வாட் பா.ஜ., - எம்.பி.,யும், மத்திய உணவு துறை அமைச்சருமான பிரஹலாத் ஜோஷி, தனது குடும்பத்தினருடன் கும்பமேளாவில் நேற்று புனித நீராடினார்.
பின், பிரஹலாத் ஜோஷி அளித்த பேட்டி:
உலகின் மிக பெரிய ஆன்மிக திருவிழாவான கும்பமேளாவில், குடும்பத்தினருடன் புனித நீராடியது நான் செய்தபாக்கியம்.
ஹிந்து மதத்தின் வெகுஜன யாத்திரையாக வெற்றி கரமாக நடத்தப்படுகிறது. கும்பமேளா சிறந்தஆன்மிக அனுபவத்தை வழங்குகிறது. இங்கு நீராடுவது பெரிய வெற்றி, நம்பிக்கை, கலாசாரத்தின் சின்னம்.
பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதல் கீழ், கும்பமேளாவுக்கு அற்புதமான ஏற்பாடுகளை உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் செய்து உள்ளார். லட்சக்கணக்கான துறவிகள், பக்தர்கள் வருகின்றனர்.
கும்பமேளா முன்எப்போதும் இல்லாதஅளவுக்கு வெற்றி பெற்று உள்ளது.
இந்த வெற்றி சனாதனத்தின் மீது மக்களுக்குஉள்ள நம்பிக்கையைநிரூபித்து உள்ளது.
இவ்வாறு அவர்கூறினார்.