வங்கதேசமும் பாகிஸ்தான் போல் மாறினால்... இதுதான் நடக்கும் என்கிறார் மத்திய அமைச்சர்
வங்கதேசமும் பாகிஸ்தான் போல் மாறினால்... இதுதான் நடக்கும் என்கிறார் மத்திய அமைச்சர்
UPDATED : செப் 05, 2024 07:16 AM
ADDED : செப் 05, 2024 06:42 AM

புதுடில்லி: 'வங்கதேசம் பாகிஸ்தான் போல மாறினால் முதலீட்டாளர்கள் அங்கு முதலீடு செய்ய யோசிப்பார்கள்' என மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்தார்.
டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், கிரிராஜ் சிங் பேசியதாவது: ஜவுளித்துறையில் இந்தியா ஒரு பெரிய சந்தையாக திகழ்கிறது. வங்கதேசம் பாகிஸ்தான் போல மாறினால் முதலீட்டாளர்கள் அங்கு முதலீடு செய்ய யோசிப்பார்கள். அங்கு புதிய அரசு கட்டுபாடுகளை மாற்றிவிட்டது. விரைவில் வங்கதேசம் பாகிஸ்தானுக்கு பெரிய சகோதரனாக மாற முடியும். அரசு மாற்றம் காரணமாக முதலீட்டாளர்கள் தவிர்க்கலாம்.
3.5 கோடி வேலைவாய்ப்புகள்
வரும் 2030க்குள் ஜவுளித்தொழிலில் உள்நாட்டு உற்பத்தி 350 பில்லியன் டாலராக உயரும். இதனால் மேலும் 3.5 கோடி வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும். ஜவுளித்துறையில் உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. நாட்டில் அந்நிய நேரடி முதலீட்டை ஈர்க்கவும் முயற்சி செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.