ஒற்றுமையின் அருமை எங்களுக்கு தெரியும்: மக்களுக்கு அமிர்தத்தை தருவோம்; ஆர்.எஸ்.எஸ்., தலைவர் விளக்கவுரை
ஒற்றுமையின் அருமை எங்களுக்கு தெரியும்: மக்களுக்கு அமிர்தத்தை தருவோம்; ஆர்.எஸ்.எஸ்., தலைவர் விளக்கவுரை
UPDATED : நவ 25, 2024 11:45 AM
ADDED : நவ 25, 2024 09:10 AM

ஐதராபாத்: ஒற்றுமையின் அருமை எங்களுக்கு தெரியும்: ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன்பகவத் ஐதராபாத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில் இவ்வாறு குறிப்பிட்டார்.
மஹாராஷ்ட்டிரா தேர்தலில் பா.ஜ., கூட்டணி யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு அபரித வெற்றி பெற்றுள்ளது. இதில் ஆர்.எஸ்.எஸ்.,களத்தில் இறங்கி பணியாற்றியதன் முக்கிய பங்கு என்றும் கூறப்படுகிறது. இந்த தேர்தலில் ஒற்றுமையே நமது இலக்கு என்ற கோஷங்கள் ஒலித்தன. இந்நிலையில் மோகன்பகவத் தேர்தல் முடிவுக்கு பின்னர் பேசியிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.
ஐதராபாத்தில் ஒரு கிராமப்புறங்களில் லோக்மந்த் கிராம நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் கலாசார நிகழ்ச்சியில் மோகன் பகவத் பேசியதாவது:
நம் முன்னோர்கள் ஒற்றுமையின் உண்மையை அறிந்திருக்கிறார்கள், அதுதான் எல்லா வகையிலும் சிறந்தது என புரிந்தவர்களாக இருந்தனர். அதனால்தான் வேற்றுமையும் , பன்முகத்தன்மையும் இருக்கிறது, வேற்றுமை சில காலம் மட்டுமே செல்ல முடியும். இறுதியில் வெறுமை மட்டுமே இருக்கிறது. ஒற்றுமை என்பது நிரந்தரமானது, நாம் அதை ஆராய்ந்தால் வேற்றுமையிலும் ஒற்றுமை இருக்கும்.
அமிர்தத்தை தருவோம்
“இந்த உலகத்தில் நாம் யாருக்கும் எதிரி இல்லை, யாரும் நமக்கு எதிரி இல்லை , யாரோ ஒருவர் ஆக்ரோஷமாக நடந்து கொண்டாலும் பரவாயில்லை, ஆனால் நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம், ஆனால் நாமும் பதிலளிப்போம். அதற்கு... நாங்கள் யாருடனும் சண்டையில் ஈடுபடுவதில்லை.
கடலில் கடையும் போது விஷம் போன்ற சவால்கள் எழும். ஆனால், அவற்றை நாங்கள் ஏற்று, அமிர்தத்தை மட்டும் சேவையாக மாற்றி அனைவரின் நலனுக்காக நாங்கள் வழங்க கடமைபட்டுள்ளோம். இவ்வாறு மோகன்பகவத் பேசினார்.