
டில்லி கார் குண்டுவெடிப்பு சம்பவம், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கையாலாகாத தனத்தை காட்டுகிறது. சொல்லப் போனால், இச்சம்பவத்துக்கு தார்மீக பொறுப்பேற்று அவர் ராஜினாமா செய்திருக்க வேண்டும். அதை விடுத்து சப்பைக்கட்டு கட்டுகிறார். இது ஒரு தீவிரமான பிரச்னை. முழுமையாக விசாரிக்க வேண்டும்.
வேணுகோபால் பொதுச்செயலர், காங்.,
எந்த சந்தேகமும் வேண்டாம்!
பா.ஜ., மேலிட தலைவர்களை மகிழ்விக்கும் வகையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளன. இதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை. பீஹார் மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். தேர்தலில், 'மஹாகட்பந்தன்' கூட்டணி தான் வெற்றி பெறும். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.
தேஜஸ்வி யாதவ் தலைவர், ராஷ்ட்ரீய ஜனதா தளம்
நல்லாட்சிக்கு சான்று!
பீஹார் சட்டசபை தேர்தலில், ஆண்களை விட பெண்கள் அதிகளவில் ஓட்டளித்துள்ளனர். இது, பிரதமர் மோடி மற்றும் மாநில முதல்வர் நிதிஷ் குமாரின் நல்லாட்சியை பிரதிபலிக்கிறது. நிச்சயம், தே.ஜ., கூட்டணிக்கு தான் பெண்கள் ஓட்டளித்திருப்பர். பீஹாரில் மீண்டும் பா.ஜ., கூட்டணி தான் ஆட்சி அமைக்கும்.
பிரதீப் பண்டாரி தேசிய செய்தித் தொடர்பாளர், பா.ஜ.,

