ADDED : ஆக 15, 2025 12:55 AM

சித்துார்:ஆந்திராவின் சித்துாரில், கெங்கினேனி அருகே மருதுபாண்டியர் சகோதரர்களின் வெண்கல சிலை நேற்று திறந்து வைக்கப்பட்டது.
தமி ழகத்தைச் சேர்ந்த மருதுபாண்டியர் சகோதரர்கள், ஆங்கிலேயர் ஆட்சியில் வெள்ளையர்களை எதிர்த்து 145 நாட்கள் போரில் ஈடுபட்டனர். அப்போது, பல நுாறு வெள்ளையர்களை போரில் கொன்று சாய்த்தனர். பின் கைது செய்யப்பட்டனர்.
கட்டபொம்மன் தம்பி ஊமைதுரை பதுங்கியிருக்கும் இடத்தை காட்டினால் உங்களை விடுதலை செய்வோம்; இல்லையென்றால் கொன்று விடுவோம் என ஆங்கிலேயர் மிரட்டினர்.
ஆனாலும், ஊமை துரையை காட்டிக் கொடுக்காமல் போரில் ஈடு பட்டனர்.
இதனால், மருதுபாண்டி சகோதரர்கள் துாக்கிலிடப்பட்டனர்.
அது மட்டுமின்றி மருது பாண்டியர்களின் சொந்த பந்தங்களில் இருந்த அனைத்து ஆண்களையும் ஆங்கிலேயர் கொன்று விட்டனர்.
இந்நிலையில், மருதுபாண்டியர் சகோதரர்களுக்கு ஆந்திராவின் சித்துாரில் பிரமாண்ட வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழா நேற்று நடந்தது.
இதில், தமிழகத்தின் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், சித்துார் கவுன்சிலர்கள் அலி, ஸ்ரீகாந்த், சகாதேவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.