ADDED : ஜன 06, 2024 12:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஷாஜஹான்பூர்:உத்தர பிரதேசத்தில், உடல்நலக்குறைவால் பா.ஜ., - எம்.எல்.ஏ., மரணம் அடைந்தார்.
உத்தர பிரதேச மாநிலம் தாத்ரால் தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ., மன்வேந்திர சிங், 70, கல்லீரல் பிரச்னையால், டில்லி ஐ.எல்.பி.எஸ்., மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்; சிகிச்சை பலனின்றி, நேற்று அதிகாலை மரணம் அடைந்தார். இந்த தகவலை, அவரது மகன் அரவிந்த் குமார் சிங் தெரிவித்தார்.
காங்கிரசில் இருந்த சிங், 2017ல் பா.ஜ.,வில் இணைந்தார். ஷாஜஹான்பூர் மாவட்டம், தாத்ரால் சட்டசபை தொகுதியில், பா.ஜ., சார்பில் போட்டியிட்டு வென்றார். இதைத் தொடர்ந்து, 2022ம் ஆண்டு நடந்த தேர்தலிலும் போட்டியிட்டு, தொகுதியை தக்கவைத்துக் கொண்டார்.
மன்வேந்திர சிங் மறைவுக்கு, உத்தர பிரதேச முதல்வர் யோகி மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.