UPDATED : ஏப் 20, 2024 09:50 PM
ADDED : ஏப் 20, 2024 09:37 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
லக்னோ: உ.பி., மொர்தாபாத் லோக்சபா தொகுதி பா.ஜ.,வேட்பாளர் குன்வர்சர்வேஸ் சிங், 72 உடல்நலக்குறைவால் காலமானார்.
லோக்சபா தேர்தலில் உபி. மாநிலம் மொர்தாபாத் லோக்சபா தொகுதி பா.ஜ. ..வேட்பாளராக இவர் நிறுத்தப்பட்டார். முதற்கட்ட லோக்சபா தேர்தலில் மொர்தாபாத் தொகுதிக்கு தேர்தல் நடந்தது.
இந்நிலையில் குன்வர் சர்வேஸ் சிங்கிற்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்படவே டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (20-ம் தேதி )சிகிச்சை பலனின்றி காலமானார். குன்வர் சர்வேஸ் சிங் மறைவுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் உ.பி. மாநி பா.ஜ.,தலைவர் பூபேந்திரா சவுத்ரி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

