உ.பி. அமைச்சரவை விஸ்தரிப்பு: புதிதாக நான்கு பேர் சேர்ப்பு
உ.பி. அமைச்சரவை விஸ்தரிப்பு: புதிதாக நான்கு பேர் சேர்ப்பு
ADDED : மார் 06, 2024 02:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
லக்னோ: உத்திரபிரதேச அமைச்சரவை நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டது. புதிதாக நான்கு பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர்.
உ.பி.யில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. முதல்வராக யோகி ஆதித்யநாத் உள்ளார். நேற்று பா.ஜ.,வைச் சேர்ந்த இருவர், கூட்டணி கட்சியைச் சேர்ந்த இருவர் என நான்கு பேர் யோகி ஆதித்யநாத் அமைச்சரவையில் இடம் பெற்றனர். கவர்னர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் நான்கு பேருக்கும் கவர்னர் ஆனந்திபென் பட்டேல் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

