திருமண வீட்டில் உ.பி. அமைச்சருக்கு அடி ,உதை, மூக்குடைப்பு
திருமண வீட்டில் உ.பி. அமைச்சருக்கு அடி ,உதை, மூக்குடைப்பு
UPDATED : ஏப் 22, 2024 07:53 PM
ADDED : ஏப் 22, 2024 07:29 PM

லக்னோ: உ.பி.யில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அமைச்சர் சஞ்சய் நிஷாத்திடம் உங்கள் மகன் எம்.பி.யாகி தொகுதிக்கு என்ன செய்தார் என அங்கிருந்தவர்கள் கேள்வி மேல் கேள்வி கேட்டதில் ஏற்பட்ட தகராறில் அமைச்சரை சரமாரியாக தாக்கி அடித்து உதைத்து பந்தாடிய சம்பவம் நடந்துள்ளது.
உபி.யில் பா.ஜ., முதல்வர் யோகி ஆதித்யநாத் அமைச்சரவையில் ‛‛நிர்பல் ஷோஸ்ஹிட் ஹமாரா ஆம் தள்'' எனப்படும் நிஷாத் கட்சி இடம் பெற்றுள்ளது. இக்கட்சியின் தலைவர் சஞ்சய் நிஷாத் உள்ளார். இவரது மகன் பிரவீன் நிஷாத் சாந்த் கபீர் நகர் தொகுதி பா.ஜ., எம்.பி.யாக உள்ளார், நேற்று முகமதுபூர் கதார் என்ற கிராமத்தில் திருமண நிகழ்ச்சியில் அமைச்சர் சஞ்சய் நிஷாத் பங்கேற்றார்.
அப்போது அங்கிருந்த சில சமூகத்தைச் சேர்ந்தவர்கள் உங்கள் மகன் பிரவீன் நிஷாத் எம்.பி.யாக எங்ககளுக்கு என்ன செய்தார். எங்கள் சமூகத்திற்கு என்ன செய்தார் என சஞ்சய் நிஷாத்தை கேள்விமேல் கேட்டு துளைத்தெடுத்தனர். ஒரு கட்டத்தில் கைகலப்பு ஏற்பட்டு அடிதடியில் முடிந்தது.
இதில் அமைச்சரை சிலர் சூழ்ந்து கொண்டு அடித்து உதைத்து பந்தாடினர். இதில் அமைச்சரின் மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது. திருமண வீடு கலவரமானது.
இதையடுத்து அமைச்சரின் செயலர் காலிலாபாத் கோட்வாலி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சிலரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
உபி. பிரதான எதிர்க்கட்சியான சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷின் சமூகமான யாதவர் சமூகத்தினர் தான் என்னை தாக்கினர் என அமைச்சர் குற்றம்சாட்டியுள்ளார்.

