நொய்டா விமான நிலையத்தில் உ.பி., முதல்வர் யோகி ஆய்வு
நொய்டா விமான நிலையத்தில் உ.பி., முதல்வர் யோகி ஆய்வு
ADDED : மார் 23, 2026 02:46 AM

நொய்டா: டில்லி அருகே, உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் சர்வதேச விமான நிலையத்தை, முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று, ஆய்வு செய்தார்.
டில்லி அருகே உத்தர பிரதேச மாநிலம் நொய்டா ஜெவார் கிராமத்தில் சர்வதேச விமான நிலையம், சரக்கு முனையம் கட்டப்பட்டுள்ளன.
இந்த விமான நிலையத்தை, பிரதமர் நரேந்திர மோடி, 28ம் தேதி திறந்து வைக்கிறார். மேலும், விமான பராமரிப்பு நிலையத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
இந்நிலையில், நொய்டா சர்வதேச விமான நிலையத்தை உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று ஆய்வு செய்தார். திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகள் குறித்து, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அதைத் தொடர்ந்து, பிரதமர் வரும் வழித்தடத்தையும் யோகி ஆதித்யநாத் ஆய்வு செய்தார்.
பயணியர் முனையம், சரக்கு முனையம், திறப்பு விழா நடக்கும் இடம், வாகன நிறுத்துமிடங்கள், அணுகு சாலை மற்றும் ஹெலிபேட் ஆகியவற்றையும் பார்வையிட்டார்.

