sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

36 இலக்கத்தில் வங்கி கணக்குக்கு வந்த பணம்; எலான் மஸ்கை ஓரம்கட்டிய உ.பி. விவசாயி

/

36 இலக்கத்தில் வங்கி கணக்குக்கு வந்த பணம்; எலான் மஸ்கை ஓரம்கட்டிய உ.பி. விவசாயி

36 இலக்கத்தில் வங்கி கணக்குக்கு வந்த பணம்; எலான் மஸ்கை ஓரம்கட்டிய உ.பி. விவசாயி

36 இலக்கத்தில் வங்கி கணக்குக்கு வந்த பணம்; எலான் மஸ்கை ஓரம்கட்டிய உ.பி. விவசாயி

18


ADDED : மே 04, 2025 08:46 PM

Google News

ADDED : மே 04, 2025 08:46 PM

18


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஹத்ராஸ்; உ.பி.,யில் ஏழை விவசாயி ஒருவரின் வங்கிக் கணக்கில் எண்ணியே பார்க்க முடியாதபடி, 36 இலக்கத்தில் பணம் கையிருப்பு இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருந்தது, ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதுபற்றிய விவரம் வருமாறு;

உ.பி., மாநிலம் ஹத்ராஸ் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் அஜித். ஏழை விவசாயி. இவருக்கு வங்கி கணக்கு ஒன்று உள்ளது. மற்றவர்களை போல, அஜித்தும் தமது வங்கி கணக்கில் பணப்பரிமாற்றம் செய்து வந்துள்ளார்.

இப்படியான சூழலில், ஏப்.24ம் தேதி இவரின் வங்கிக் கணக்கில் 2 முறை பரிமாற்றம் நடந்துள்ளது. முதலில் ரூ.1800ம், அதன் பின்னர் ரூ.1.400ம் எடுக்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்த நாள் தான் அஜித் மட்டும் அல்ல, அவரின் ஒட்டுமொத்த கிராமமும் அதிர்ச்சி அளிக்கும் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அவரின் வங்கிக்கணக்கில் உள்ள பணத்தின் இருப்பு ரூ. 1,00,13,56,00,00,01,39,54,21,00,23,56,00,00,01,39,542 என்று காட்டி உள்ளது. அதாவது, 36 இலக்கங்களுடன் அவரின் வங்கிக்கணக்கில் பணம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அடடா.. எண்ணமுடியாத, கணக்கிலே வைக்க முடியாத பணமா என்று அஜித் ஒருபுறமும், அவரின் மனைவி மறுபுறமும் நினைத்து, நினைத்து உள்ளம் பூரிப்படைந்து உள்ளனர். அதன் பின்னர், சைபர் மோசடிகள் பற்றிய செய்திகள், சம்பவங்கள் இருவரின் கண்முன் நிழலாக வந்து போக ஒரு கணம் பயந்து போய் இருக்கின்றனர்.

வங்கிக்கு சென்ற அஜித் 36 இலக்க பண கையிருப்பு பற்றி அதிகாரிகளிடம் கூறி இருக்கிறார். ஜம்மு காஷ்மீரில் உள்ள வங்கி கிளையை கண்காணித்த போது ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு தான், கவலை வேண்டாம் சரியாகிவிடும் என்று அனுப்பி வைத்திருக்கின்றனர்.

வங்கி அதிகாரிகளின் பதிலைக் கேட்ட அஜித்தும் அரைமனதுடன் வீடு திரும்பி இருக்கிறார். ஆனால் அதற்கு அடுத்த நாட்களில் அதே 36 இலக்க பண கையிருப்பு இருக்க, பீதி அடைந்த அவர் நேராக காவல்துறையின் கதவுகளை தட்டி இருக்கிறார். அவரின் பிரச்னையை அறிந்த போலீசார், சைபர் க்ரைமுக்கு அனுப்ப வேண்டிய புகார் என்று கூறி எழுதி வாங்கிவிட்டு போக சொல்லி இருக்கின்றனர்.

அதன் பின்னர், நாட்கள் மட்டுமே நகர்ந்ததே தவிர, நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தற்போது அஜித்தின் வங்கி கணக்கு முற்றிலும் முடக்கப்பட்டு இருக்கிறது.

அஜித்தின் வங்கி கணக்கில் உள்ள அந்த 36 இலக்க பண கையிருப்பு எவ்வளவு என்று கணக்கிட முடியவில்லை. அவரும், வங்கி அதிகாரிகளும் முயன்றும் விடை கிடைக்கவில்லை.

உலகின் ஆக பெரும் பணக்காரர், ஸ்பேஸ் எக்ஸ் முதன்மை செயல் அதிகாரி எலான் மஸ்கின் நிகர மதிப்பை விட அஜித்தின் பண கையிருப்பு அதிகமாக உள்ளது. எலான் மஸ்கின் கையிருப்பு ரூ. 2,84,17,69,27,10,400 என நிர்ணயிக்கப்பட்டது. இது 14 இலக்க எண்ணிக்கையாகும்.

அதையும் அடித்து நொறுக்கி, அஜித் வங்கிக் கணக்கில் 36 இலக்கத்திலுள்ள ரூ.1,00,13,56,00,00,01,39,54,21,00,23,56,00,00,01,39,542 எப்படி எண்ணுவது என்பது தான் பலருக்கும் புரியாத புதிராக உள்ளது. (இதை எண்ணுபவர்கள் எவ்வளவு என்பதை கமெண்ட்டில் சொல்லலாம்)






      Dinamalar
      Follow us