உ.பி. அரசு மருத்துவமனையில் தீ விபத்து: குழந்தைகள் 10 பேர் பலி
உ.பி. அரசு மருத்துவமனையில் தீ விபத்து: குழந்தைகள் 10 பேர் பலி
UPDATED : நவ 16, 2024 06:48 AM
ADDED : நவ 16, 2024 12:20 AM

லக்னோ; உ.பி.யில் அரசு மருத்துவமனை குழந்தைகள் வார்டில் இன்று இரவு பயங்கர தீ விபத்து சம்பவம் ஏற்பட்டது. இதில் குழந்தைகள் 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 17 பேர் பலத்த காயமுற்றனர்.
உத்தரபிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டம் ஜான்சி லக்ஷமிபாய் அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரியில் குழந்தைகள் வார்டில் இன்று (நவ. 16) இரவு 12 மணியளவில் திடீரென தீ விபத்து சம்பவம் ஏற்பட்டது.
![]() |
தீ மளமள மற்ற பகுதிகளுக்கும் பரவியது. இச்சம்பவத்தில் குழந்தைகள் 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 17 பேர் பலத்த காயமுற்றனர். தகவலறிந்த தீயணைப்பு படையினர், ஏராளமான வாகனங்களில் விரைந்து வந்து தீயை அணைக்க போராடிவருகின்றனர்.
மின்கசிவு தீ விபத்திற்கு காரணம் என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத், துணை முதல்வர், சுகதாரத்துறை செயலர் ஆகியோரை சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணி மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார். குழந்தைகள் பலியானது தமக்கு வேதனை அளிப்பதாக தெரிவித்தார்.