தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/உ.பி., வாக்காளர் பட்டியல் ‘டிஜிட்டல்’ மயமாக்கம் தேர்தல் கமிஷன் பணிகளை சுலபமாக்கிய இளைஞர்

உ.பி., வாக்காளர் பட்டியல் ‘டிஜிட்டல்’ மயமாக்கம் தேர்தல் கமிஷன் பணிகளை சுலபமாக்கிய இளைஞர்

உ.பி., வாக்காளர் பட்டியல் ‘டிஜிட்டல்’ மயமாக்கம் தேர்தல் கமிஷன் பணிகளை சுலபமாக்கிய இளைஞர்


UPDATED : நவ 25, 2026 10:06 PM

ADDED : நவ 25, 2026 10:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 25, 2026 10:06 PM ADDED : நவ 25, 2026 10:06 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

லக்னோ: உத்தர பிரதேச வாக்காளர் பட்டியலில், வாக்காளர்கள் தங்கள் பெயரை எளிதில் கண்டுபிடிக்கும் வகையிலான தரவுத்தளத்தை உருவாக்கி, ஜார்க்கண்டைச் சேர்ந்த 18 வயது இளைஞர் சர்தக் சித்தாந்த் சாதனை படைத்துள்ளார்.

உத்தர பிரதேசத்தில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இங்கு, எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி மேற்கொள்ளப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது. வாக்காளர் விபரங்கள் அனைத்தும், பி.டி.எப்., எனப்படும் கையடக்க வடிவிலான ஆவணங்களாக வெளியிடப்பட்டுள்ளன.

மொத்தம் 6.8 லட்சம் பக்கம் அடங்கிய ஆவணங்களில், ஒரு வாக்காளர் குறித்த தரவுகளை தேடுவது மிகவும் கடினமாக உள்ளது. ஒவ்வொரு கோப்பையும் பதிவிறக்கம் செய்து, பக்கம்பக்கமாகத் தேட வேண்டிய நிலை உள்ளது. இதற்கு, ஜார்க்கண்டின் ராஞ்சியைச் சேர்ந்த சர்தக் சித்தாந்த் என்ற இளைஞர் தீர்வு கண்டுள்ளார்.

தேர்தல் கமிஷனால் தொகுக்கப்பட்ட உத்தர பிரதேச வாக்காளர் பட்டியலின் 6.8 லட்சம் பி.டி.எப்., ஆவணங்களை, சமீபத்தில் டிஜிட்டல் மயமாக்கினர். ஸ்கேன் செய்யப்பட்ட ஆவணங்களை, தேடக்கூடிய மற்றும் கட்டமைக்கப்பட்ட தரவுத் தொகுப்பாக மாற்றினர். ஓ.சி.ஆர்., எனப்படும், ‘ஆப்டிகல் கேரக்டர் ரெகக்னிஷன்’ என்ற தொழில்நுட்பம் வாயிலாக கணினியால் படிக்கக்கூடிய தரவுகளாக அவை மாற்றப்பட்டன. இதன் வாயிலாக, உ.பி.,யின் 403 சட்டசபை தொகுதிகளில் உள்ள 54.8 கோடி வாக்காளர்களின் விபரங்கள் தேடக்கூடிய வகையில் மாற்றப்பட்டு உள்ளன.

கடந்த 2024 லோக்சபா தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல், எஸ்.ஐ.ஆர்., வரைவுப் பட்டியல், இறுதிப்பட்டியல் மற்றும் 2027ம் ஆண்டுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் என நான்கு வகையான ஆவணங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. இந்தத் தரவுகளை பொதுமக்கள் இலவசமாகப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us