ADDED : ஜன 04, 2025 10:21 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:கிழக்கு டில்லியில் ஏற்பட்ட சாலை விபத்தில், உத்தர பிரதேச போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உயிரிழந்தார்.
புதுடில்லி திரிலோக்புரியைச் சேர்ந்தவர் பிரதீப் குமார்,47. உத்தர பிரதேசத்தின் காஜியாபாத்தில் போக்குவரத்துப் பிரிவு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தார்.
கிழக்கு டில்லி டெல்கோ டி--பாயின்ட் மேம்பாலத்தில், நேற்று முன் தினம் இரவு 10:30 மணிக்கு, 'ஹீரோ ஸ்பிளெண்டர்' பைக்கில் சென்றார். பின்னால் வந்த ஒரு வாகனம், பிரதீப் பைக் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. தூக்கி வீசப்பட்ட பிரதீப் குமார், அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.
சம்பவ இடத்தில் இருந்து வணிக வாகனத்துக்கான நம்பர் பிளேட் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்புக் கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.