ADDED : நவ 15, 2024 11:51 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பிரயாக்ராஜ்: உத்தர பிரதேசத்தில், அரசு பணிக்கான முதல்நிலை தேர்வு, டிச., 7 மற்றும் 8, ஆய்வு அதிகாரி, உதவி ஆய்வு அதிகாரிக்கான தேர்வு, டிச., 22 மற்றும் 23ல் நடத்தப்படும் என, அம்மாநில அரசு பணியாளர் தேர்வாணையம் சமீபத்தில் அறிவித்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவர்கள், இரு தேர்வுகளையும் ஒரே நாளில் ஒரு ஷிப்ட்டில் நடத்தும்படி வலியுறுத்தி, பிரயாக்ராஜில் உள்ள தேர்வாணைய அலுவலகம் முன், நான்கு நாட்களுக்கும் மேல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், மாணவர்களின் கோரிக்கையை ஏற்ற தேர்வாணையம், முதல்நிலை தேர்வு, டிச., 22ல் இரு ஷிப்டுகளாக நடக்கும் என, நேற்று அறிவித்தது. இதை ஏற்ற மாணவர்கள், தங்களது போராட்டத்தை கைவிட்டனர்.

