தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ மேல்சபை இடைத்தேர்தல் பா.ஜ., வேட்பாளர் வெற்றி

மேல்சபை இடைத்தேர்தல் பா.ஜ., வேட்பாளர் வெற்றி

மேல்சபை இடைத்தேர்தல் பா.ஜ., வேட்பாளர் வெற்றி


ADDED : அக் 25, 2024 07:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 25, 2024 07:54 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: பா.ஜ., - எம்.பி., கோட்டா சீனிவாச பூஜாரியால் காலியான, தட்சிண கன்னடா உள்ளாட்சியில் இருந்து, மேல்சபைக்கு நடந்த இடைத்தேர்தலில், பா.ஜ., வேட்பாளர் கிஷோர் குமார் வெற்றி பெற்றார்.

தட்சிண கன்னடா மற்றும் உடுப்பியின் உள்ளாட்சிகளில் இருந்து மேல்சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு, எம்.எல்.சி.,யாக இருந்தவர் கோட்டா சீனிவாச பூஜாரி. நடப்பாண்டு மே மாதம் நடந்த லோக்சபா தேர்தலில், உடுப்பி - சிக்கமகளூரு தொகுதியில் பா.ஜ., சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனால் எம்.எல்.சி., பதவியை ராஜினாமா செய்தார்.

கோட்டா சீனிவாச பூஜாரியால் காலியான, மேல்சபை தொகுதிக்கு இம்மாதம் 21ம் தேதி, இடைத்தேர்தல் நடந்தது. இரண்டு மாவட்டங்களின், உள்ளாட்சி உறுப்பினர்கள் ஓட்டு போட்டனர். பா.ஜ., வேட்பாளராக கிஷோர் குமாரும், காங்கிரஸ் சார்பில் ராஜு பூஜாரியும் களமிறங்கினர்.

மங்களூரின் கொடியால் பைலுவில் உள்ள செயின்ட் பி.யு., கல்லுாரியில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன், ஓட்டு எண்ணிக்கை நடந்தது. தட்சிண கன்னடா மாவட்ட கலெக்டர் முல்லை முகிலன், உடுப்பி கலெக்டர் வித்யாகுமாரி பார்வையிட்டனர்.

பா.ஜ., வேட்பாளர் கிஷோர் குமார், 1,697 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் கடலோர மாவட்டம் பா.ஜ.,வின் பாதுகாப்பு கோட்டை என்பது உறுதியானது. பா.ஜ., அலுவலகத்தில், வெற்றி விழா கொண்டாடினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us