அமெரிக்கா குற்றச்சாட்டு எதிரொலி: அதானி நிறுவன குழும பங்குகள் கடும் சரிவு
அமெரிக்கா குற்றச்சாட்டு எதிரொலி: அதானி நிறுவன குழும பங்குகள் கடும் சரிவு
UPDATED : நவ 21, 2024 12:32 PM
ADDED : நவ 21, 2024 10:25 AM

புதுடில்லி: அதானி மீது நியூயார்க் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டை தொடர்ந்து, அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் விலை 10 சதவீதம் முதல் 28 சதவீதம் வரை சரிந்துள்ளது.
தொழிலதிபர் அதானி சூரிய ஓளி மின்சாரத்தை பெறுவதற்கு 25 கோடி டாலர்கள் லஞ்சமாக இந்திய அதிகாரிகளுக்கு கொடுத்து பெற்றுள்ளார். அதில் அமெரிக்கர்களை முதலீடு செய்ய வைத்து மிகப்பெரிய மோசடியை நிகழ்த்தியுள்ளார்' என நியூயார்க் பெடரல் நீதிமன்றத்தில் அமெரிக்கா வழக்கு ஒன்று தொடர்ந்துள்ளது. இந்நிலையில் இன்று (நவ.,21) அதானி குழு நிறுவன பங்குகள் விலை சரிந்துள்ளன.
அதன் விபரம் பின்வருமாறு:
* அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் விலை 10 சதவீதம் முதல் 28 சதவீதம் வரை சரிந்துள்ளது.
* அதானி என்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவன பங்கு விலை 10 சதவீதம் சரிந்துள்ளது.
* அதானி போர்ட் பங்கு விலை 10 சதவீதத்துக்கும் மேல் சரிந்துள்ளது.
* அதானி பவர் நிறுவன பங்கு விலை 13 சதவீதமும், அதானி எனர்ஜி நிறுவன பங்கு விலை 20 சதவீதமும் சரிந்துள்ளன.
* அதானி டோட்டல் கேஸ் நிறுவனத்தின் பங்கு விலை 13 சதவீதமும், அதானி வில்மர் நிறுவனத்தின் பங்கு விலை 10 சதவீதமும் சரிந்துள்ளன.
டாலர் பத்திர விலை சரிவு
அதானி நிறுவனங்களின் டாலர் அடிப்படையிலான கடன் பத்திர விலைகள் கடுமையாக சரிந்துள்ளன. 2027ல் முதிர்ச்சி அடையும், அதானி துறைமுகம் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலம் வழங்கிய கடன் பத்திர விலை 5 சென்ட் விட அதிகமாக சரிந்துள்ளது.
அதேபோல், பிப்ரவரி 2030ல் முதிர்ச்சி அடையும் அதானி எலக்ட்ரிசிட்டி மும்பையின் பத்திர விலையும் 8 சென்ட் சரிந்துள்ளது. அதானி டிரான்ஸ்மிஷன் பத்திர விலையும் 5 சென்ட் சரிவை சந்தித்துள்ளது.