தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/இந்தியாவில் அணு உலைகள் தயாரிப்பு ஒப்புதல் அளித்தது அமெரிக்கா

இந்தியாவில் அணு உலைகள் தயாரிப்பு ஒப்புதல் அளித்தது அமெரிக்கா

இந்தியாவில் அணு உலைகள் தயாரிப்பு ஒப்புதல் அளித்தது அமெரிக்கா


ADDED : ஏப் 01, 2025 06:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 01, 2025 06:19 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி : இந்தியா - அமெரிக்கா இடையேயான சிவில் அணு ஒப்பந்தம் கையெழுத்தாகி, 17 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், அணு உலைகளை இந்தியாவில் கூட்டாக வடிவமைத்து, தயாரிப்பதற்கு அமெரிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

சிவில் அணு ஒப்பந்தம் தொடர்பாக, இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே, 2007ல் கையெழுத்தானது. அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், அமெரிக்க அதிபராக இருந்த ஜார்ஜ் புஷ் இதில் கையெழுத்திட்டனர்.

இந்த ஒப்பந்தத்தின்படி, அமெரிக்க நிறுவனங்கள், அணு உலைகளை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யும். அதே நேரத்தில் இந்தியாவில் வடிவமைத்து, தயாரிக்கப்பட வேண்டும் என, மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.

கடந்த, 17 ஆண்டுகளாக இது தொடர்பாக பல கட்டங்களாக நடந்த பேச்சுகளைத் தொடர்ந்து, அணு உலைகளை இந்தியாவிலேயே கூட்டாக வடிவமைத்து, தயாரித்து, தொழில்நுட்பத்தை பகிர்ந்து கொள்வதற்கு, அமெரிக்க அரசின் அணுசக்தி துறை சமீபத்தில் அனுமதி அளித்துள்ளது.

மத்திய அரசு மேற்கொண்ட நீண்ட முயற்சிகளுக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்படுகிறது. இந்தத் துறையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் கூட்டாக வடிவமைத்து, தயாரிப்பதற்கு அமெரிக்கா முன் வந்துள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த 'ஹோல்டெக் இன்டர்நேஷனல்' என்ற நிறுவனத்தின் விண்ணப்பத்தை ஏற்று இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்திய வம்சாவளியான கிருஷ்ணா சிங், இந்த நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

இந்த நிறுவனத்தின் துணை நிறுவனமான 'ஹோல்டெக் ஆசியா' மஹாராஷ்டிரா மாநிலம் புனேயை தலைமையிடமாக வைத்து செயல்படுகிறது. குஜராத்தின் பரூச் மாவட்டம் தஹேஜில் இதன் ஆலை உள்ளது. ஹோல்டெக் இன்டர்நேஷனல் நிறுவனம், அணு உலைகள் தயாரிப்பில் முன்னிலையில் உள்ள நிறுவனங்களில் ஒன்று.

அமெரிக்க அரசின் ஒப்புதலைத் தொடர்ந்து, இந்த நிறுவனம், தன் துணை நிறுவனமான ஹோல்டெக் ஆசியா, மற்றும் 'லார்சன் அண்ட் டூப்ரோ லிமிடெட், டாடா கன்சல்டிங் இன்ஜினியர்ஸ் லிமிடெட்' ஆகிய நிறுவனங்களுக்கு, தன் தொழில்நுட்பத்தை பகிர்ந்து கொள்ள முடியும்.

அதாவது இந்த மூன்று நிறுவனங்களும் இணைந்து கூட்டாக, இந்தியாவில் வடிவமைத்து, தயாரிக்க உள்ளன. இதைத் தவிர, அணு மின் நிலையம் அமைப்பதற்காக, மத்திய அரசின், என்.பி.சி.ஐ.எல்., எனப்படும் இந்திய அணுசக்தி வாரியம் லிமிடெட், என்.டி.பி.சி., எனப்படும் நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன், ஏ.இ.ஆர்.பி., எனப்படும் அணுசக்தி ஆய்வு வாரியம் ஆகியவற்றுடன் இணைந்தும் செயல்பட, ஹோல்டெக் இன்டர்நேஷனல் தயாராக உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us