குறைவான வரிகள், ஏற்றுமதி வர்த்தகத்தில் முன்னுரிமை; இந்தியாவுக்கு அமெரிக்கா உறுதி
குறைவான வரிகள், ஏற்றுமதி வர்த்தகத்தில் முன்னுரிமை; இந்தியாவுக்கு அமெரிக்கா உறுதி
ADDED : நவ 15, 2026 03:53 PM

கெய்ரோ; மற்ற நாடுகளை விட குறைவான வரிகளுடன், ஏற்றுமதி வர்த்தகத்தில் முன்னுரிமை அளிப்பதாக இந்தியாவுக்கு அமெரிக்கா உறுதி அளித்துள்ளது.
எகிப்தில் இந்திய சமூகத்தினர் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. இதில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பீயூஷ் கோயல் கலந்து கொண்டார். அங்கு அவர் நிருபர்களிடம் கூறியதாவது;
சில மாதங்கள் முன்பாக பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப இடையே எட்டப்பட்ட ஒப்பந்தத்தின் ஒரு பகுதிதான் இந்த உறுதிமொழி. இரு நாடுகளாலும் இந்த உறுதி மொழி ஒப்புக் கொள்ளப்பட்டுவிட்டது.
நமது போட்டி நாடுகளை விட குறைந்த வரியுடன், அமெரிக்காவில் இந்தியாவுக்காக ஏற்றுமதி வர்த்தகத்தில் முன்னுரிமை கிடைக்கும். உலக நாடுகளில் நிச்சயமற்ற வர்த்தக சூழல் நிலவுகிறது. இந்தியாவின் நம்பகத் தன்மை அதிகரித்து வருவதால், முன்னணி நாடுகள் வர்த்தகம் ஒப்பந்தங்களை செய்து கொள்ள ஆர்வம் காட்டுகின்றன.
உள்நாட்டு அரசியலின் தாக்கங்கள், வெளிநாடுகளின் தேர்தல் முடிவுகள், இந்தியாவின் வர்த்தக கொள்கைகளுடன் இணைத்து பார்க்க வேண்டியது இல்லை. இதில் இந்தியா தெளிவாக இருக்கிறது.
இவ்வாறு அமைச்சர் பீயூஷ் கோயல் கூறினார்.
