தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/அஜித் தோவலுக்கு சம்மன் அனுப்ப அமெரிக்க நீதிமன்றம் குட்டிக்கரணம்!

அஜித் தோவலுக்கு சம்மன் அனுப்ப அமெரிக்க நீதிமன்றம் குட்டிக்கரணம்!

அஜித் தோவலுக்கு சம்மன் அனுப்ப அமெரிக்க நீதிமன்றம் குட்டிக்கரணம்!


ADDED : நவ 19, 2026 08:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 19, 2026 08:19 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

​புதுடில்லி: காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுன் தொடர்ந்த வழக்கில், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் 'ரா' உளவு அமைப்பின் முன்னாள் தலைவர் சமந்த் கோயல் ஆகியோருக்கு, டில்லியில் உள்ள மாவட்ட நீதிமன்றங்களுக்கு சர்வதேச தபால் மூலம் சம்மன் அனுப்ப அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

​தன்னைக் கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியதாகக் கூறி, எஸ்.எப்.ஜே., எனப்படும், 'சீக்ஸ் பார் ஜஸ்டிஸ்' என்ற பயங்கரவாத அமைப்பின் நிறுவனர் குர்பத்வந்த் சிங் பன்னுன், அமெரிக்காவின் நியூயார்க் தெற்கு மாவட்ட நீதிமன்றத்தில் சிவில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் இந்திய அரசு மற்றும் அஜித் தோவல், சமந்த் கோயல் உள்ளிட்டோர் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

முன்னதாக, இந்திய சட்ட அமைச்சகம் வழியாக சம்மன் அனுப்ப எடுத்த முயற்சிகள் நிராகரிக்கப்பட்ட நிலையில், தற்போது சர்வதேச ஹேக் ஒப்பந்தத்தின் கீழ் டில்லியின் பாட்டியாலா ஹவுஸ், துவாரகா மற்றும் திஸ் ஹசாரி ஆகிய நீதிமன்றங்களுக்கு, சர்வதேச தபால் மூலம் ஆவணங்களை அனுப்ப அமெரிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

​கட்டுப்படுத்தாது:


​எனினும், இந்த சம்மன் இந்தியாவை எந்த வகையிலும் கட்டுப்படுத்தாது என அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும், வெளிநாட்டு நீதிமன்ற ஆவணங்களை மத்திய சட்ட அமைச்சகம் வழியாக மட்டுமே அனுப்ப முடியும் என்றும், பன்னுன் தொடர்ந்துள்ள வழக்கு உள்நோக்கம் கொண்டது என்றும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் ஏற்கனவே திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us