வாய்ப்பேச்சு வன்முறையானது; துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழப்பு; அமெரிக்காவில் தான் இந்த அவலம்!
வாய்ப்பேச்சு வன்முறையானது; துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழப்பு; அமெரிக்காவில் தான் இந்த அவலம்!
UPDATED : செப் 02, 2024 10:59 AM
ADDED : செப் 02, 2024 10:52 AM

வாஷிங்டன்: அமெரிக்காவில் பக்கத்து வீட்டாருடன் ஏற்பட்ட சண்டையால் வன்முறை வெடித்தது. இதில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். 2 பேர் பலத்த காயமுற்றனர்.
அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் சர்வ சாதாரணம். தனி நபர்கள் துப்பாக்கி வைத்திருக்க அரசு அனுமதிக்கிறது. எனினும் அதை பயன்படுத்துவதற்கும் எண்ணற்ற கட்டுப்பாடுகள் உள்ளன. 18 வயதுக்குட்பட்ட தனிநபர்கள், தண்டனை பெற்ற குற்றவாளிகள் மனநலம் குன்றியவர்கள் உள்ளிட்டோர் துப்பாக்கி வைத்திருக்க தடையும் உள்ளது.. ஆனாலும் துப்பாக்கி சூடு சம்பவம் அடிக்கடி நடக்கிறது. உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.
துப்பாக்கிச் சூடு
இந்நிலையில், அமெரிக்காவில் ஹவாய் தீவில் பக்கத்து வீட்டாருடன் ஏற்பட்ட சண்டையால் வன்முறை வெடித்தது. ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கி கொண்டனர். அப்போது ஒருவர் துப்பாக்கியால் பக்கத்து வீட்டில் வசித்து வந்தவர்கள் மீது சுட்டார். தனது குடும்பத்தினரை தாக்கியதும் ஆத்திரமடைந்த பக்கத்து வீட்டுக்காரரும் பதிலுக்கு துப்பாக்கியால் சுட்டார்.
2 பேர் சீரியஸ்
இதில் முதலில் துப்பாக்கி சூடு நடத்தியவர், 3 பெண்கள் என 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 2 பெண்கள் பலத்த காயமுற்று ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விசாரணை நடக்கிறது.