sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 30, 2026 ,பங்குனி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

அமெரிக்கா எங்களை டாய்லெட் பேப்பர் போல தூக்கி எறிந்தது; பாக் அமைச்சர் புலம்பல்

/

அமெரிக்கா எங்களை டாய்லெட் பேப்பர் போல தூக்கி எறிந்தது; பாக் அமைச்சர் புலம்பல்

அமெரிக்கா எங்களை டாய்லெட் பேப்பர் போல தூக்கி எறிந்தது; பாக் அமைச்சர் புலம்பல்

அமெரிக்கா எங்களை டாய்லெட் பேப்பர் போல தூக்கி எறிந்தது; பாக் அமைச்சர் புலம்பல்

34


UPDATED : பிப் 11, 2026 12:28 PM

ADDED : பிப் 11, 2026 12:25 PM

Google News

34

UPDATED : பிப் 11, 2026 12:28 PM ADDED : பிப் 11, 2026 12:25 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இஸ்லாமாபாத்: ''அமெரிக்கா எங்களை பயன்படுத்தி விட்டு, டாய்லெட் பேப்பர் போல தூக்கி எறிந்தது''என பாகிஸ்தான் பாதுகாப்பு துறை அமைச்சர் கவாஜா ஆசீப் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.



இது குறித்து அவர் கூறியதாவது: அமெரிக்கா தங்களது சுயநலனுக்காக எங்களை பயன்படுத்தி கொண்டது. பிறகு டாய்லெட் பேப்பர் போல தூக்கி எறிந்தது. 1999க்குப் பிறகு மீண்டும் அமெரிக்காவுடன் கூட்டணி வைக்க பாகிஸ்தான் எடுத்த முடிவு, குறிப்பாக ஆப்கானிஸ்தானுடன் உறவில் பெரிய சேதத்தை ஏற்படுத்தியது. 2001க்குப் பிறகு அமெரிக்கா தலைமையிலான ஆப்கன் போரில் பாகிஸ்தான் அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட்டது.

இதனால் பாகிஸ்தான் நீண்டகால வன்முறை மற்றும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டது. முன்னாள் ராணுவ ஆட்சியாளர்களான ஜியா-உல்-ஹக் மற்றும் பர்வேஸ் முஷாரப் ஆகியோர் பாகிஸ்தானை வெளிப்புறப் போர்களில் சிக்க வைத்தனர். நாங்கள் சந்தித்த இழப்புகளை ஒருபோதும் ஈடுசெய்ய முடியாது. அந்த முடிவுகள் திருத்த முடியாத தவறுகள். அவை பாகிஸ்தானை மோதல்களின்போது மற்றவர்களால் இயக்கப்படும் பகடைக்காயாக மாற்றின.

ஆப்கானிஸ்தான் மோதலில் பாகிஸ்தானின் தலையீடு என்பது மதக் கடமையின் பேரில் முன்னெடுக்கப்பட்டது என்பது உண்மை கிடையாது. பாகிஸ்தான் தனக்கு அவசியமற்ற மோதல்களில் பங்கேற்றது பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. இது இன்னும் முழுமையாக சரிசெய்யப்படவில்லை. இவ்வாறு பாகிஸ்தான் அமைச்சர் கவாஜா ஆசீப் வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார்.






      Dinamalar
      Follow us