பொருளாதார வளர்ச்சிக்கு பயன்படுத்துங்கள்: செலுவராயசாமி
பொருளாதார வளர்ச்சிக்கு பயன்படுத்துங்கள்: செலுவராயசாமி
ADDED : பிப் 09, 2024 07:48 AM
மாண்டியா: ''அரசின் வாக்குறுதி திட்டங்களை, பெண்கள் தங்களின் பொருளாதார வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும், என விவசாயத்துறை அமைச்சர் செலுவராயசாமி அறிவுரைகூறினார்.
மாண்டியாவில் நேற்று அவர் கூறியதாவது:
வறட்சி நிவாரண பணிகளை மேற்கொள்ள, மத்திய அரசு நிதியுதவி வழங்கவில்லை. எனவே மாநில அரசு விவசாயிகள் கணக்கில், 2,000 ரூபாய் செலுத்த முடிவு செய்துள்ளது.
வருவாய்த்துறை அமைச்சர் கிருஷ்ண பைரேகவுடாவுடன், மாநிலம் முழுதும் சுற்றுப்பயணம் செய்து, வறட்சி சூழ்நிலையை ஆய்வு செய்து, முதல்வர் சித்தராமையாவிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளோம்.
வாக்குறுதி திட்டங்களுக்கு, 69,000 கோடி ரூபாய் செலவிட்டும், சாலை பணிகளை துவக்க சட்டசபை தொகுதிகளுக்கு, 50 கோடி ரூபாய் நிதி வழங்கியது. மாண்டியா மாவட்டத்தின், 47 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள், வாக்குறுதி திட்டங்களால் பயனடைந்துள்ளனர்.
மாநில அரசு செயல்படுத்திய, வாக்குறுதி திட்டங்கள், பல்வேறு திட்டங்களின் கீழ், மாவட்ட கூட்டுறவு வங்கிகள் மூலமாக வழங்கும், வட்டியில்லா கடனை பெண்கள், தங்களின் பொருளாதார வளர்ச்சிக்காக பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

