தீண்டாமையை ஊக்குவிப்பதா?: உ.பி அரசுக்கு ஓவைசி கேள்வி
தீண்டாமையை ஊக்குவிப்பதா?: உ.பி அரசுக்கு ஓவைசி கேள்வி
UPDATED : ஜூலை 18, 2024 05:22 PM
ADDED : ஜூலை 18, 2024 05:20 PM

லக்னோ: உத்தர பிரதேச அரசு தீண்டாமையை ஊக்குவிக்கிறது என ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி குற்றம் சாட்டியுள்ளார்.
உத்தர பிரதேசத்தில் உள்ள கன்வர் யாத்ரா வழித்தடத்தில் உள்ள உணவகங்களில் உணவு விற்பனை செய்பவர்களின் பெயர்களைக் காண்பிக்க வேண்டும் என போலீசார் உத்தரவிட்டுள்ளனர். இது குறித்து அசாதுதீன் ஓவைசி கூறியிருப்பதாவது:
உணவு விற்பனை செய்பவர்களின் விவரங்களை கேட்பது, தீண்டாமையைப் பற்றிப் பேசும் அரசியலமைப்பு சட்டம் 17வது பிரிவை மீறுவதால், நாங்கள் கண்டிக்கிறோம். உத்தர பிரதேச அரசு தீண்டாமையை ஊக்குவிக்கிறது.
இந்த உத்தரவு பிறப்பித்ததில் இருந்து முசாபர்நகரில் உள்ள அனைத்து கடைகளில் இருந்தும் உரிமையாளர்கள் முஸ்லீம் மதத்தை சேர்ந்த ஊழியர்களை பணியில் இருந்து நீக்கி உள்ளனர். யோகி ஆதித்யநாத்துக்கு தைரியம் இருந்தால் எழுத்துப்பூர்வ உத்தரவை பிறப்பிக்குமாறு நான் சவால் விடுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.