தண்டவாளத்தில் படுத்து ரயில் வரும்போது வீடியோ எடுத்த வாலிபர்!
தண்டவாளத்தில் படுத்து ரயில் வரும்போது வீடியோ எடுத்த வாலிபர்!
ADDED : ஏப் 09, 2025 07:55 AM

லக்னோ; உ.பி.யில் ரயில் வரும்போது தண்டவாளத்தில் படுத்து ரீல்ஸ் வீடியோ எடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுபற்றிய விவரம் வருமாறு;
உத்தரப்பிரதேசத்தில் ரஞ்சித் கவுராசியா என்ற வாலிபருக்கு ரீல்ஸ் வீடியோ எடுப்பதில் அதிக ஆர்வம். கிடைக்கும் சந்தர்ப்பங்களில் புதிது, புதியதாக வீடியோக்களை எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிடுவார்.
வித்தியாசமாக ஏதாவது வீடியோ எடுக்க வேண்டும் என்று எண்ணிய அவருக்கு ஒரு விபரீத யோசனை உதித்தது. ரயில் தண்டவாளத்தில் படுத்து, ரயில் மேலே ஓடும் போது ரீல்ஸ் எடுத்தால் என்ன என்று யோசித்து அதை அப்படியே செய்திருக்கிறார்.
ஹிந்தி படப்பாடலை ஒலிக்க செய்து, தண்டவாளத்தில் ரஞ்சித் கவுராசியா படுத்திருக்க, தண்டவாளத்தில் ரயில் சென்றுள்ளது. இந்த வீடியோவை அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட வைரலாகி போலீசின் கவனத்துக்குச் சென்றுள்ளது.
அவர் யார், எங்கே இருக்கிறார் என்று தேடி பிடித்து ரயில்வே போலீஸ் கைது செய்திருக்கிறது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரயில்வே போலீஸ் எச்சரித்துள்ளது.

