தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ கிறிஸ்துமஸ் விழாவுக்கு வெண்ணிலா ஸ்பாஞ்ச் கேக்

கிறிஸ்துமஸ் விழாவுக்கு வெண்ணிலா ஸ்பாஞ்ச் கேக்

கிறிஸ்துமஸ் விழாவுக்கு வெண்ணிலா ஸ்பாஞ்ச் கேக்


ADDED : டிச 20, 2024 11:13 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 20, 2024 11:13 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கிறிஸ்துமஸ் என்றால், நமது முதலில் நினைவுக்கு வருவது கிறிஸ்துமஸ் தாத்தாவும், கேக்கும் தான். இந்நேரத்தில் 'பிளம் கேக்' மிகவும் பிரபலம். ஒரு சிலர் வீட்டிலேயே கேக் செய்து கொண்டாடுவர். இன்னும் சிலர், கடைகளில் கேக் வெட்டி கொண்டாடுவர்.

இம்முறை வீட்டிலேயே பிளம் கேக் இல்லாமல், 'வெண்ணிலா கேக்' செய்யலாமா.

செய்முறை


▶ பெரிய பாத்திரத்தில் மைதா, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடாவை நன்றாக கலந்து கொள்ள வேண்டும். மற்றொரு பாத்திரத்தில் இரண்டு முட்டையை சேர்த்து, நன்றாக கிளற வேண்டும். முட்டையில் லேசாக நுரை வரும் போது, பொடி சர்க்கரையை சேர்த்து, நல்ல கிரீம் பதத்தில் திரும்பவும் கிளறி விட வேண்டும்.

▶ நன்றாக கிளறியவுடன், கலவையில் 2 டேபிள் ஸ்பூன் வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து மீண்டும் கிளற வேண்டும். இப்போது தேவையான அளவு பாலும், எண்ணெயும் சேர்த்து கொள்ளுங்கள். நன்றாக கலந்த பின், மைதா மாவு கலவையை சிறிது சிறிதாக சேர்த்து, மெதுவாக கலக்க வேண்டும்.

▶ கேக் பேக்கிங் டிரேயில் வெண்ணெய் தடவி, தனியாக வைத்து கொள்ளுங்கள். இதன் பின், 'ஓவனில்' 2 நிமிடம் வைக்கவும். லேசாக சூடான பின், அந்த கேக் டிராலியில், மாவு கலவையை ஊற்றி, 160 டிகிரி செல்ஷியஸ் வெப்பத்தில், ஓவனில் 30 நிமிடங்கள் வைக்க வேண்டும்.

▶ அரை மணி நேரத்துக்கு பின், குச்சியால் குத்தி பார்க்க வேண்டும். குச்சியில் மாவு ஒட்டாமல் வெளியே வந்தால், கேக் நன்றாக வெந்து விட்டது என்று அர்த்தம். இல்லை என்றால், கூடுதலாக ஐந்து முதல் பத்து நிமிடம் வரை வேக வைக்கவும்.

▶ கேக் வெந்த பின், அதை எடுத்து வைத்து, சூடு ஆறியதும், உங்கள் விருப்பப்படி, எந்த வடிவில் வேண்டுமானாலும் வெட்டி கொள்ளலாம். அவ்வளவு தான், சுவையான வெண்ணிலா ஸ்பாஞ்ச் கேக் ரெடி.

▶ நாம் கடையில் வாங்குவது போன்று மிகவும் சுவையாக இருக்கும். வீட்டிலேயே செய்வதால் ஆரோக்கியமாகவும், தரமானதாகவும் இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவர்.

- நமது நிருபர் -

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us