ADDED : ஜன 05, 2026 04:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு ஸ்டோனி பிரிட்ஜ் மீன் மார்க்கெட்டுக்கு, ஐந்து டன் நேற்று விற்பனைக்கு வந்தது. வழக்கமாக, 7.5 டன் மீன்கள் வரத்-தாகும்.
கிறிஸ்துமஸ் காரணமாக படகுகள் அதிகம் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லாததே வரத்து குறைய காரணம். மார்க்கெட்-டுக்கு தலா, 11 கிலோ எடையில் ஏழு வஞ்சிரம் மீன் வரத்தானது. ஒரு கிலோ, 1,300 ரூபாய்க்கு விற்றது. கடந்த வாரம், 750 ரூபாய்க்கு விற்றது. அதேசமயம் கடந்த வாரம் கிலோ, 200 ரூபாய்க்கு விற்ற மத்தி மீன், 300 ரூபாய்க்கு விற்றது. மார்க்கெட்டில் பிற மீன்கள் விலை விபரம் (கிலோ-ரூபாயில்): கருப்பு வாவல்-800, கடல் அவுரி-700, முரல்-450, கடல் பாறை-500, கனவா-500, சங்-கரா-400, வெள்ளை வாவல்-900, மயில் மீன்-500, விள மீன்-500, இறால்-650, திருக்கை-450, கொடுவா-750,
அயிலை-250.

