வாகனத்தில் தொற்றிய சிறுத்தை; சுற்றுலா பயணியர் அதிர்ச்சி
வாகனத்தில் தொற்றிய சிறுத்தை; சுற்றுலா பயணியர் அதிர்ச்சி
ADDED : அக் 08, 2024 06:35 AM

பன்னர்கட்டா : கர்நாடகாவில், சபாரி வாகனத்தின் ஜன்னலில் சிறுத்தை தொற்றியதால் சுற்றுலா பயணியர் அதிர்ச்சி அடைந்தனர்.
கர்நாடகா மாநிலம் பெங்களூரு பன்னர்கட்டா உயிரியல் பூங்காவில் சுற்றுலா பயணியர் வனவிலங்குகளை பார்த்து ரசிக்கும் வகையில், வனத்துறை வாகனங்களில் சபாரிக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
இந்நிலையில், சமீபத்தில் சுற்றுலா பயணியரை சபாரி அழைத்துச் சென்ற, வனத்துறை வேனின் மீது ஒரு சிறுத்தை பாய்ந்து தொங்கியபடி சத்தமாக உறுமியது.
இதனால் வேனுக்குள் இருந்த சுற்றுலா பயணியர் அதிர்ச்சி அடைந்தனர். ஆனாலும் வேனை டிரைவர் நிறுத்தாமல் ஓட்டிச் சென்றதால், சிறுத்தை கீழே குதித்தது.
பூங்காவின் நிர்வாக இயக்குனர் சூர்யா சென் கூறுகையில், “சிறுத்தை கூச்ச சுபாவம் கொண்ட விலங்கு. தினமும் வனத்துறை வாகனங்களை பார்த்து பழகியதாலும், அந்த வாகனங்களில் செல்வோரால் எந்த தொந்தரவு இல்லை என்று தெரிந்து கொண்டதாலும், வாகனம் மீது தொற்றி உள்ளது,” என்றார்.
