தேவரபீசனஹள்ளி பிரதான சாலையில் 60 நாட்கள் வாகனங்கள் செல்ல தடை
தேவரபீசனஹள்ளி பிரதான சாலையில் 60 நாட்கள் வாகனங்கள் செல்ல தடை
ADDED : நவ 14, 2024 09:34 PM
பெங்களூரு; தேவர பீசனஹள்ளி சக்தா மருத்துவமனை பிரதான சாலையில், 'ஒயிட் டாப்பிங்' பணிகள் நடக்கவுள்ளதால் 60 நாட்கள் வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு போக்குவரத்து போலீசார் வெளியிட்ட அறிக்கை:
பெங்களூரு மாநகராட்சி சார்பில் பல்வேறு இடங்களில் ஒயிட் டாப்பிங் பணிகள் நடக்கின்றன. தற்போது தேவர பீசனஹள்ளி பிரதான சாலையில், ஒயிட் டாப்பிங் பணிகள் துவங்க உள்ளது. மிந்த்ரா அபார்ட்மென்ட் முன்பகுதியில் இருந்து பெல்லந்துார் எல்லை வரை 60 நாட்கள் வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
எமலுார் பகுதியில் இருந்து, தேவரபீசன ஹள்ளி மற்றும் பெல்லந்துாரை நோக்கி வரும் வாகனங்கள், பழைய விமான நிலைய சாலை - எமலுார் சந்திப்பு - மாரத்தஹள்ளி மேம்பாலம் - காடுபீசன ஹள்ளி மேம்பாலம் - வெளிவட்ட சாலை வழியாக, தேவரபீசனஹள்ளி, பெல்லந்துாருக்கு செல்லலாம்.
எமலுாரில் இருந்து, காடுபீசனஹள்ளி, தேவரபீசனஹள்ளியை நோக்கி செல்வோர், பழைய விமான நிலைய சாலை வழியாக, எமலுார் சந்திப்பு - எமலுார் வில்லேஜ் வழியாக எமலுார் கோடி வரை சென்று, இடது புறம் திரும்பி, கரியம்மன அக்ரஹாரா வழியாக, செல்லலாம்.
தேவர பீசனஹள்ளி, பெல்லந்துாரில் இருந்து பெங்களூரை நோக்கி வரும் வாகனங்கள், வெளிவட்ட சாலை, காடுபீசனஹள்ளி மேம்பாலம், மாரத்தஹள்ளி மேம்பாலத்தில் சென்று, இடது புறம் திரும்பி, எமலுார் சந்திப்பு, பழைய விமான நிலைய சாலை வழியாக நகருக்குள் வரலாம்.
காடு பீசனஹள்ளி, தேவரபீசனஹள்ளி பகுதியில் இருந்து நகருக்கு வரும் வாகனங்கள், கரியம்மன அக்ரஹாரா, எமலுார் எல்லையில், வலது புறம் திரும்பி, எமலுார் சந்திப்புக்கு வந்து பழைய விமான நிலைய சாலை வழியாக, நகருக்குள் வரலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.