வேலுநாச்சியார் பிறந்த நாள்; பிரதமர் மோடி புகழாரம்!
வேலுநாச்சியார் பிறந்த நாள்; பிரதமர் மோடி புகழாரம்!
ADDED : ஜன 03, 2025 12:13 PM

புதுடில்லி: வீரமங்கை வேலுநாச்சியார் பிறந்த நாளை முன்னிட்டு, பிரதமர் மோடி அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
அவர் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: துணிச்சல் மிக்க ராணி வேலு நாச்சியாரை அவரது பிறந்தநாளில் நினைவு கூர்வோம். காலனித்துவ ஆட்சிக்கு எதிராக வீரப் போராட்டத்தை நடத்தியவர் வேலுநாச்சியார். ஒடுக்குமுறைக்கு எதிராக நிற்கவும், சுதந்திரத்திற்காகப் போராடவும் தலைமுறைகளைத் தூண்டியவர். பெண்களை மேம்படுத்துவதில் அவரது பங்கும் பரவலாகப் பாராட்டை பெற்றது. இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் சாவித்திரி பாய் புலே பிறந்தநாள் முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: சாவித்ரிபாய் புலேயின் பிறந்தநாளில் அவருக்கு அஞ்சலி. அவர் பெண்கள் அதிகாரமளித்தலுக்கு ஒரு கலங்கரை விளக்கமாகவும், கல்வி மற்றும் சமூக சீர்திருத்தத் துறையில் முன்னோடியாகவும் உள்ளார். மக்களின் சிறந்த வாழ்க்கைத் தரத்தை உறுதி செய்ய நாங்கள் உழைக்கும்போது அவரது முயற்சிகள் எங்களுக்கு ஊக்கமளிக்கின்றன. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

