தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/மிகவும் ஆபத்தானது!

மிகவும் ஆபத்தானது!

மிகவும் ஆபத்தானது!


ADDED : டிச 18, 2025 12:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 18, 2025 12:19 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மத்திய பா.ஜ., அரசு கொண்டு வந்துள்ள புதிய அணுசக்தி மசோதா, போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமல், தனியார் மயமாக்கலை நோக்கி அணுசக்தி துறையை தள்ளுகிறது. இது மிகவும் ஆபத்தானது. இது அணுசக்தி மசோதாவா அல்லது தெளிவற்ற மசோதாவா என்பது எனக்கு தெரியவில்லை. ஒரே குழப்பமாக இருக்கிறது.

- சசி தரூர், லோக்சபா எம்.பி., - காங்.,

ஆலோசனை வழங்குவது யார்?

மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டத்தின் பெயரை மாற்றுவது தேவையற்றது. ஒருவரின் பெயரில், 'ராம்' இருப்பதால் அனைத்துக்கும் உரிமம் கோர முடியாது. இது போன்ற ஆலோசனைகளை அரசுக்கு வழங்குவது யார்? காந்தியின் பெயரை நீக்குவதால், தே.ஜ., கூட்டணி கட்சிகளே கலக்கம் அடைந்துள்ளன.

- மனோஜ் குமார் ஜா, ராஜ்யசபா எம்.பி., - ராஷ்ட்ரீய ஜனதா தளம்

அமைச்சர்களை கைது செய்க!


மேற்கு வங்கத்தின் கொல்கட்டாவில், கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி பங்கேற்ற நிகழ்வில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளன. டிக்கெட் கட்டணத்திலும் முறைகேடு நடந்துள்ளது. இதற்கு ஆளும் திரிணமுல் காங்., அமைச்சர்கள் அரூப் பிஸ்வாஸ் மற்றும் சுஜித் போஸ் தான் காரணம். அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும்.

- சுவேந்து அதிகாரி, மேற்கு வங்க சட்டசபை எதிர்க்கட்சி தலைவர், பா.ஜ.,

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us