
பீஹார் சட்டசபை தேர்தலுக்காக பிரசாரம் செய்ய கட்சி மேலிடம் என்னை அழைக்கவில்லை. அதனால், அங்குள்ள நிலவரம் பற்றி கருத்து தெரிவிக்க முடியாது. தேர்தல் தோல்விக்கான காரணங்களை, காங்., மேலிடம் நிச்சயம் ஆராயும். கட்சியின் உட்கட்டமைப்பு, செயல்திறன் பற்றி விரிவாக ஆராய வேண்டியது மிகவும் அவசியம்.
சசி தரூர் லோக்சபா எம்.பி., - காங்.,
முறியடிப்போம்!
வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் என்ற ஆயுதத்தை வைத்து, பீஹாரில், பா.ஜ., 'கேம்' ஆடியுள்ளது. மேற்கு வங்கம், தமிழகம், உ.பி., உள்ளிட்ட மாநிலங்களில், இந்த விளையாட்டை அனுமதிக்க மாட்டோம். பீஹார் தேர்தலில் பா.ஜ.,வின் சதி அம்பலமாகி விட்டது. இதை நாங்கள் முறியடிப்போம்.
அகிலேஷ் யாதவ் தலைவர், சமாஜ்வாதி
அடுத்தது மே.வங்கம்!
பீஹார் சட்டசபை தேர்தல் முடிவுகள், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதல்வர் நிதிஷ் குமாரின் நல்லாட்சிக்கு சான்று. லாலு பிரசாத் - ராகுல் கூட்டணியை மாநிலத்தில் இருந்து மக்கள் விரட்டி அடித்துள்ளனர். இந்த வெற்றி வெறும் துவக்கம். பீஹாரை தொடர்ந்து மேற்கு வங்கத்தையும் கைப்பற்றுவோம்.
கிரிராஜ் சிங் மத்திய அமைச்சர், பா.ஜ.,

