தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/'சாமி' படத்தில் வில்லனாக அறிமுகமான நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார்!

'சாமி' படத்தில் வில்லனாக அறிமுகமான நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார்!

'சாமி' படத்தில் வில்லனாக அறிமுகமான நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார்!


UPDATED : ஜூலை 13, 2025 06:52 AM

ADDED : ஜூலை 13, 2025 06:42 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 13, 2025 06:52 AM ADDED : ஜூலை 13, 2025 06:42 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஹைதராபாத்: தமிழில் 'சாமி' படத்தில் வில்லனாக அறிமுகமான நடிகர் கோட்டா சீனிவாச ராவ்,83, உடல்நல குறைவால் இன்று காலமானார்.

ஆந்திராவை சேர்ந்த பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ளார். இவர் ஜூலை 10ம் தேதி, 1942ம் ஆண்டு ஆந்திரா மாநிலம், விஜயவாடாவில் பிறந்தார். இவருக்கு வயது 83.

இவர் குணசித்திர வேடத்திலும், வில்லன் வேடத்திலும் நடித்து பிரபலமானார். 2003ம் ஆண்டு வெளியான சாமி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். 1999 - 2004ம் ஆண்டு வரை ஆந்திர பிரதேச விஜயவாடா கிழக்குத் தொகுதியின் சட்டசபை உறுப்பினராக இருந்துள்ளார்.

மேலும், திருப்பாச்சி, குத்து, ஏய், கோ, சகுனி போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகர், பாடகர், டப்பிங் கலைஞர் என பல்வேறு திறன்களை கொண்டுள்ளார். மொத்தம் 750 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இவரது நடிப்பில் கடைசியாக 2023ம் ஆண்டு சுவர்ண சுந்தரி என்ற படம் வெளியானது.

கடந்த சில தினங்களாக, உடல்நலக் குறைவால் அவதிப்பட்ட நடிகர் கோட்டா ஸ்ரீனிவாச ராவ் (83) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இன்று (ஜூலை 13) அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் காலமானார். அவரது மறைவிற்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us