தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ பழம்பெரும் ஹிந்தி நடிகர் மனோஜ் குமார் காலமானார்

பழம்பெரும் ஹிந்தி நடிகர் மனோஜ் குமார் காலமானார்

பழம்பெரும் ஹிந்தி நடிகர் மனோஜ் குமார் காலமானார்


ADDED : ஏப் 04, 2025 08:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 04, 2025 08:10 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மும்பை: வயது மூப்பு காரணமாக பழம்பெரும் ஹிந்தி நடிகரும், இயக்குநருமான மனோஜ் குமார் மும்பையில் இன்று காலமானார்.

ஹிந்தி சினிமாவின் பழம்பெரும் நடிகர்களில் ஒருவர் மனோஜ் குமார், 87. இவர் கடந்த 1937ம் ஆண்டு ஜூலை 24ம் தேதி பிறந்தார். இவர் பெரும்பாலும் நாட்டுப்பற்று மிக்க படங்களில் நடித்தும், இயக்கியும் பிரபலமானவர். இவரை பரத் குமார் என்றும் அழைத்து வருகின்றனர்.

புராப் அவுர் பஸ்ஜிம், கிரான்டி, ரொட்டி, காபாடா அவுர் மாகான் உள்ளிட்ட பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.

1992ம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும், 2015ல் சினிமாவின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதையும் மத்திய அரசு வழங்கி கவுரவித்துள்ளது.

பா.ஜ.,வில் இணைந்து அரசியலில் ஈடுபாடு காட்டி வந்த மனோஜ் குமார், வயது மூப்பு காரணமாக, பல்வேறு உடல்நலப் பிரச்னைகளை சந்தித்து வந்தார். இந்த நிலையில், மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரை பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us