பெண்ணிடம் பாலியல் சீண்டல் வீடியோ: சட்டசபையில் முதல்வர் யோகி ஆவேசம்
பெண்ணிடம் பாலியல் சீண்டல் வீடியோ: சட்டசபையில் முதல்வர் யோகி ஆவேசம்
ADDED : ஆக 01, 2024 11:15 PM

லக்னோ: உ.பி.யில் சாலையில் தேங்கிய மழை நீரில் இரு சக்கர வாகனத்தில் சென்ற இளம் பெண்ணுக்கு பாலியல் சீண்டல் விவகாரம் தொடர்பாக போலீஸ் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து முதல்வர் உத்தரவிட்டார்.
உபி.யில் பெய்த கனமழை காரணமாக உத்தர பிரதேசத்தின் லக்னோ அருகே கோமதி நகர் தாஜ் ஹோட்டல் பாலம் பகுதி மழைநீரால் மூழ்கியது. அவ்வழியாக ஆண் நண்பருடன் பைக் பின்னால் அமர்ந்து இளம் பெண் வந்து கொண்டிருந்தார்.
அப்போது சில இளைஞர்கள் இளம் பெண் மீது நீரை எடுத்து ஊற்றியும், பாலியல் சீண்டலில் ஈடுபட்டனர். இதன் வீடியோ இணையத்தில் வைரலாகி உ.பி.யில் பெண்கள் பாதுகாப்பு கேள்வி குறியாகியுள்ளதாக கண்டனம் எழுந்தது.
இது தொடர்பாக முதல்வர் சட்டசபையில் பேசியது, இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக இன்ஸ்பெக்டர், கூடுதல் எஸ்.பி., டி.எஸ்.பி. உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் சிலரை சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டுள்ளேன். மாநிலத்தில் பெண்கள் பாதுகாப்பு என்றுமே முக்கியம் என்றார்.