ADDED : ஜன 01, 2024 06:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகல்கோட்: ''மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா, முதல்வராகும் வரை நாங்கள் அவருக்கு சக்தியாக இருப்போம், என பா.ஜ., முன்னாற் அமைச்சர் கோவிந்த் கார்ஜோள் தெரிவித்தார்.
பாகல்கோட்டில் நேற்று அவர் கூறியதாவது:
மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திராவை, நாங்கள் முதல்வராக்கியே தீருவோம். அவர் முதல்வராகும் வரை, நாங்கள் அவருக்கு சக்தியாக இருப்போம். மீன் குஞ்சுக்கு நீந்த கற்றுத்தர வேண்டியது இல்லை. விஜயேந்திரா மீன் குஞ்சு போன்றவர். அவருக்கு நீந்த கற்றுத்தர தேவையில்லை.
எடியூரப்பாவை விட, விஜயேந்திரா ஒரு படி முன்னே இருப்பார். மாநில தலைவரான பின், முதல் முறையாக பாகல்கோட் வந்துள்ளார். இவரது வருகை தொண்டர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.