வினேஷ், பஜ்ரங் புனியாவுக்கு வந்தாச்சு சிக்கல்! மொத்தமாய் 'செக்' வைக்கும் ரயில்வே
வினேஷ், பஜ்ரங் புனியாவுக்கு வந்தாச்சு சிக்கல்! மொத்தமாய் 'செக்' வைக்கும் ரயில்வே
ADDED : செப் 07, 2024 07:21 AM

புதுடில்லி; வினேஷ் போகத், பஜ்ரங் புனியா இருவரின் ராஜினாமா கடிதங்களை ரயில்வே நிர்வாகம் இன்னும் ஏற்கவில்லை; இதனால் காங்கிரஸ் கட்சியில் இணைந்த இருவருக்கும் சிக்கல் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
வேட்பாளர்கள் பட்டியல்
ஹரியானாவில் அடுத்த மாதம் 5ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் எதிரொலியாக முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டு உள்ளது. அதில் 31 வேட்பாளர்களின் பெயர்கள் இடபெற்று உள்ளன.
வேலை ராஜிநாமா
வேட்பாளர்கள் பட்டியலில் நேற்று கட்சியில் இணைந்த பிரபல மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்துக்கு சீட் வழங்கப்பட்டு உள்ளது.ஜூலானா தொகுதியில் அவர் களம் காண்பதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. கட்சியில் இணைவதற்கு முன்பு வினேஷ் போகத், பஜ்ரங் புனியா இருவரும் ரயில்வேயில் தாம் பார்த்து வந்த வேலையை ராஜினாமா செய்தனர். தங்களின் ராஜினாமா கடிதங்களை ரயில்வே நிர்வாகத்துக்கு அவர்கள் அனுப்பி வைத்தனர்.
ஏற்கப்படவில்லை
இந்நிலையில், வினேஷ் போக, பஜ்ரங் புனியா இருவரின் ராஜினாமா கடிதங்கள் இன்னும் ஏற்கப்படவில்லை, அப்படி இருக்கும் பட்சத்தில் அவர்கள் அரசியல் கட்சியில் சேர்ந்தது செல்லாது என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ரயில்வே நிர்வாகத்தால் ராஜினாமா அதிகாரப்பூர்வமாக ஏற்கப்படாத நிலையில் கட்சியின் உறுப்பினர் அட்டையை பெற்றது செல்லாது, தேர்தலில் நிற்க முடியாது.
போட்டியிட முடியாது
ராஜினாமா கடிதம் ஏற்கப்படாததால் தற்போது வரை அவர்கள் அதிகாரிகள் என்ற நிலையில் தான் உள்ளனர். அதாவது, அரசாங்க பணியில் இருப்பவர்களாக குறிப்பிடப்படுவார்கள். அரசாங்க பணியில் உள்ள எவரும் ஒரு கட்சியிலோ அல்லது தேர்தலிலோ போட்டியிட முடியாது.
நோட்டீஸ்
இது குறித்து ரயில்வே நிர்வாகம் தரப்பில் கூறப்படுவதாவது: வினேஷ் போகத், பஜ்ரங் புனியா இருவருக்கும் நேற்று விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படவில்லை. புதன்கிழமையே விளக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுவிட்டது.
சிக்கல்
அதன் பின்னரே, இருவருமே வெள்ளிக்கிழமை ராஜினாமா கடிதங்களை சமர்ப்பித்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. ராஜினாமா கடிதங்கள் ஏற்கப்படவில்லை என்பதால் தேர்தலில் வேட்பாளராக களம் இறங்கி உள்ள வினேஷ் போகத்துக்கும், காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து செயல் தலைவராக நியமிக்கப்பட்டு உள்ள பஜ்ரங் புனியாவுக்கும் சிக்கல் என்பதுதான் லேட்டஸ்ட் நிலைமை.