விதி மீறிய ஆட்டோ ஓட்டுனர்கள் ரூ.6.35 லட்சம் அபராதம் வசூல்
விதி மீறிய ஆட்டோ ஓட்டுனர்கள் ரூ.6.35 லட்சம் அபராதம் வசூல்
ADDED : பிப் 01, 2024 11:06 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூரு: பெங்களூரில் சிறப்பு வாகன சோதனை நடத்திய போக்குவரத்து போலீசார், விதிகளை மீறிய ஆட்டோ ஓட்டுனர்கள் மீது 1,226 வழக்குகள் பதிவு செய்து, 6.35 லட்சம் ரூபாய் அபராதம் வசூலித்தனர்.
பெங்களூரு போக்குவரத்து போலீசார், அவ்வப்போது விதிகளை மீறும் வாகன ஓட்டிகளை கண்டுபிடிக்கும் வகையில், சிறப்பு வாகன சோதனை நடத்துவர்.
அதுபோன்று, கடந்த ஜன., 29ம் தேதி நகரின் பல இடங்களில் போக்குவரத்து போலீசார் சோதனை நடத்தினர்.
அப்போது நோ என்ட்ரியில் வந்தது உட்பட பல்வேறு விதிகளை மீறியதாக, ஆட்டோ ஓட்டுனர்கள் மீது 1,226 வழக்குகள் பதிவு செய்து, 6 லட்சத்து 35 ஆயிரத்து 200 ரூபாய் அபராதம் வசூலித்தனர். அத்துடன், 'இனி இதுபோன்று செயல்படக்கூடாது' என, எச்சரித்து அனுப்பினர்.

