தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/பிரதமர் மோடிக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம்: காங்., நோட்டீஸ்

பிரதமர் மோடிக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம்: காங்., நோட்டீஸ்

பிரதமர் மோடிக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம்: காங்., நோட்டீஸ்


UPDATED : ஜூலை 31, 2024 05:37 PM

ADDED : ஜூலை 31, 2024 05:27 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 31, 2024 05:37 PM ADDED : ஜூலை 31, 2024 05:27 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி; பா.ஜ., எம்.பி., அனுராக் தாக்கூரின் பேச்சை பாராட்டி, கருத்து தெரிவித்த பிரதமர் மோடிக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் உரிமை மீறல் தீர்மானம் நோட்டீஸ் அளிக்கப்பட்டு உள்ளது.

பட்ஜெட் தொடர்பான விவாதத்தில் நேற்று முன்தினம்(ஜூலை 29) பேசிய எதிர்க்கட்சி தலைவர் ராகுல், மத்திய அரசை கடுமையாக சாடி பேசினார். 'நாடு தற்போது ஆறு பேரின் கைகளில் உள்ளது. மத்திய அரசு வகுக்கும் எந்த சக்கர வியூகத்தையும் நாங்கள் உடைத்தெறிவோம், என்று அவர் பேசினார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய பா.ஜ., எம்.பி., அனுராக் தாக்கூர், ''தன் ஜாதி பெயரே தெரியாதவர் ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து பேசுவதா என பதிலடி கொடுத்தார். ராகுலை கடுமையாக விமர்சித்து பேசினார்.

இந்த பேச்சு அடங்கிய வீடியோவை 'எக்ஸ் ' சமூக வலைதளத்தில் வெளியிட்ட பிரதமர் மோடி, இளம் மற்றும் மிகுந்த ஆற்றல் உள்ள அனுராக் தாக்குர் லோக்சபாவில் பேசியதை அனைவரும் கேட்க வேண்டும். உண்மைகளை, நகைச்சுவையுடன் கலந்து அவர் பேசியது, இண்டியா கூட்டணியின் பொய் அரசியல் பிரசாரத்தை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. எனக்கூறினார்.

இதனையடுத்து பிரதமர் மோடிக்கு எதிராக காங்கிரஸ் எம்.பி.,யும் பஞ்சாப் முன்னாள் முதல்வருமான சரண்ஜித் சிங் சன்னி, உரிமை மீறல் தீர்மானத்தை தாக்கல் செய்துள்ளார். லோக்சபா செயலாளரிடம் அளித்த அந்த நோட்டீசில் கூறப்பட்டு உள்ளதாவது:

அனுராக் தாக்கூர் பேசியதில் குறிப்பிட்ட ஆட்சேபனைக்கு உரிய கருத்துகள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டு உள்ளது. ஆனால், எதையும் நீக்காமல், அனுராக் தாக்கூரின் முழு வீடியோவையும் பிரதமர் மோடி வெளியிட்டது அதிர்ச்சி அளிக்கிறது. ஆட்சேபனைக்குரிய வார்த்தைகளையும் மோடி வெளியிட்டார். இவ்வாறு அந்த தீர்மானத்தில் கூறப்பட்டு உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us