உ.பியில் விநாயகர் சிலை கரைப்பு நிகழ்வில் வன்முறை: பக்தர்கள் மீது கல்வீச்சு - பதற்றம்
உ.பியில் விநாயகர் சிலை கரைப்பு நிகழ்வில் வன்முறை: பக்தர்கள் மீது கல்வீச்சு - பதற்றம்
ADDED : செப் 15, 2024 03:04 AM

லக்னோ: உ.பி.யில் விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலத்தின் போது இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியதால் கல்வீச்சு சம்பவம் நடந்தது.
உ.பி. மாநிலம் மெஹோபா மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி, கோட்வாலி என்ற இடத்தில் ஹிந்து அமைப்புகள், பொதுமக்கள் சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை ஏரியில் கரைக்க நேற்று வாகனங்களில் எடுத்து செல்லப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இங்கு கோட்வாலி நகரில் குறிப்பிட்ட சமூகத்தினர் பெரும்பான்மையாக வசித்து வருகின்றனர். நேற்று இப்பகுதியில் ஊர்வலம் சென்று கொண்டிருந்த போது சிலர் பக்தர்கள் மீது கற்களை வீசியதுடன், வாளியில் நிரப்பி வைத்திருந்த தண்ணீரை பக்தர்கள் மீது ஊற்றினர். இதனால் அங்கு இரு சமூகத்தினரிடையே மோதல் கலவரமாக மாறியது. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
**************