மணிப்பூரில் மீண்டும் வெடித்த வன்முறை: 4 பேர் சுட்டுக்கொலை
மணிப்பூரில் மீண்டும் வெடித்த வன்முறை: 4 பேர் சுட்டுக்கொலை
UPDATED : ஜன 01, 2024 10:42 PM
ADDED : ஜன 01, 2024 10:28 PM

இம்பால்: மணிப்பூரில் புத்தாண்டு கொண்டாட்டத்தி்ல் ஏற்பட்ட மோதல் கலவரமாக வெடித்ததில் 4 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மணிப்பூரில் பெரும்பான்மையாக வசிக்கும் மெய்டி சமூகத்தினருக்கு, பட்டியலின பழங்குடி அந்தஸ்து அளிப்பதை எதிர்த்து, கூகி உள்ளிட்ட பழங்குடியினர் அமைப்புகள் கடந்த ஆண்டு நடத்திய பேரணியில் வன்முறை வெடித்தது. இதை தொடர்ந்து பழங்குடியின பெண்கள் நிர்வாணமாக அழைத்துச் செல்லப்பட்ட சம்பவங்கள் ஆகியவற்றால், மணிப்பூர் முழுதும் கலவரம் வெடித்தது. இதில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
கலவரம் ஒய்ந்த நிலையில் நேற்று துபால் மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது இரு தரப்பு மோதல் வன்முறையாக மாறியது. இதில் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் தானியங்கி ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வன்முறை பக்கத்து மாவட்டமான பிஷ்னாப்பூர், கிழக்கு இம்பால் ஆகிய பகுதிகளும் பரவியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.