உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : மே 28, 2026 10:50 PM

அ நிறம் | அளவு
நேபாளத்தில் விஜய யாத்திரை மேற்கொண்டுள்ள சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விது சேகர பாரதீ சன்னிதானம், ஏகாதசி தினமான மே 28 புதன் கிழமை அன்று போக்ரா வழியாக முக்தி நாத் சென்றடைந்தார்.
பிரகாரத்தினை வலம் வந்தபின் அங்குள்ள 108 தாராவாக பொழியும் தீர்த்தங்களில் ஸ்னானம் செய்தார். அமர்ந்த நிலையில் எழுந்தருளியிருக்கும் மஹாவிஷ்ணுவின் கோவிலில் துளசி அர்ச்சனை செய்து, தீபாராதனை செய்து சிறப்பு பூஜை செய்தார். அதேபோல் போக்ராவில் குகைக்குள் அமைந்துள்ள குப்தேஸ்வரர், கேதாரேஸ்வரர் மற்றும் விந்த்ய வாசினி ஆகிய கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டார்.
அங்கு குழுமி இருந்த பக்தர்களுக்கு அருளுரை வழங்கியபின், உலக நலன் கருதி தினசரி நடக்கும் ஸ்ரீ சந்த்ர மெளலீஸ்வரர் பூஜையினை செய்து அருளினார்.
