ADDED : ஜன 17, 2025 02:08 AM

அய்ஸ்வால்,வட கிழக்கு மாநிலமான மிசோரமின் கவர்னராக இருந்தவர் ஹரி பாபு கம்பம்பதி.
இவர், ஒடிசா மாநில கவர்னராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து மிசோரம் கவர்னராக வி.கே.சிங்கை நியமித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டார்.
கடந்த 2010 முதல் 2012 வரை, ராணுவ தலைமை தளபதியாக பதவி வகித்துள்ள வி.கே.சிங், அதிலிருந்து ஓய்வுபெற்ற பின், 2014ல் பா.ஜ.,வில் இணைந்து உத்தர பிரதேசத்தின் காசியாபாத் லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
மீண்டும் அதே தொகுதியில் 2019ல் வென்றார்.
இரண்டு முறையும் மத்திய இணை அமைச்சராக பல்வேறு துறைகளின் பொறுப்புகளை வகித்தார்.
இந்நிலையில், அவர் மிசோரம் கவர்னராக நியமிக்கப்பட்டார். அய்ஸ்வாலில் உள்ள கவர்னர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில், குவஹாத்தி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி விஜய் பிஷ்னோய், வி.கே.சிங்கிற்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.