ADDED : செப் 20, 2024 10:22 PM

பாலக்காடு : பாலக்காடு ஐ.ஐ.டி.,யில், இரு நாட்கள் நடக்கும் தொழில் கல்வி மாநாடு நேற்று துவங்கியது.
கேரள மாநிலம், பாலக்காடு ஐ.ஐ.டி.,யில் இரு நாட்கள் நடக்கும், 6வது தொழில் கல்வி மாநாட்டை, ஐ.ஐ.டி., இயக்குனர் பேராசிரியர் சேஷாத்ரி சேகர் நேற்று துவக்கி வைத்தார். மாநாட்டில், 'இசட்.எப்., குரூப்' காற்றாலை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முதுநிலை பொது மேலாளர் ஸ்ரீநிவாஸ் பங்கேற்றார். ஐ.ஐ.டி., புதுடில்லி ரசாயன பொறியியல் துறை பேராசிரியர் ஸ்ரீதேவி உபாத்யாயுலா, தெர்மோ கெமிக்கல் வாட்டர் பிளவுபடுத்தும் செயல்முறை மேம்பாடு குறித்து பேசினார்.
ஐ.சி.எஸ்.ஆர்., அசோசியேட் டீன் அரவிந்த் அஜோய், தலைமை கல்வியாளர் ஆனந்த் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். பிரபல நிறுவன தலைவர்களும், மூத்த தொழில் மற்றும் கல்வி வல்லுநர்களும் மாநாட்டில் பங்கேற்றனர்.
ஐ.ஐ.டி., ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் கண்டுபிடிப்புகள் மற்றும் ஆராய்ச்சி திட்டங்கள் அறிமுகம், கண்காட்சி மற்றும் கலந்துரையாடல் ஆகியவை மாநாட்டின் ஒரு பகுதியாக நடந்தது. தொழில் கல்வி மாநாடு இன்று நிறைவுபெறுகிறது.