தேர்தலில் நிகில் தோற்றதால் தொண்டர் தற்கொலை முயற்சி
தேர்தலில் நிகில் தோற்றதால் தொண்டர் தற்கொலை முயற்சி
ADDED : நவ 24, 2024 10:55 PM
ராம்நகர்: சென்னப்பட்டணா தொகுதி இடைத்தேர்தலில் நிகில் தோற்று போனதால், ம.ஜ.த., தொண்டர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
ராம்நகரின் சென்னப்பட்டணா தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தல் முடிவு நேற்று முன்தினம் வெளியானது. தேசிய ஜனநாயக கூட்டணியில் ம.ஜ.த., வேட்பாளராக போட்டியிட்ட நிகில் குமாரசாமி தோல்வி அடைந்தார். இரண்டு முறை தேர்தலில் தோல்வி அடைந்த அவர், இம்முறை வெற்றி பெறுவார் என, ம.ஜ.த., தொண்டர்கள் நம்பிக்கையுடன் இருந்தனர். ஆனால் அது நடக்கவில்லை.
இந்நிலையில், சென்னப்பட்டணா அருகே குட்லுார் கிராமத்தில் வசித்து வரும் ம.ஜ.த., தொண்டர் அபி, 35 என்பவர் நேற்று முன்தினம் இரவு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை குடும்பத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அவர் எழுதியிருந்த கடிதத்தில், 'நிகில் குமாரசாமியின் தோல்வியை என்னால் தாங்கி கொள்ள முடியவில்லை. இதனால் நான் உயிரிழக்கிறேன். என் சாவுக்கு நானே காரணம். ஜெய் ம.ஜ.த., -- என்.டி.ஏ.,' என்று எழுதி உள்ளார்.